புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2025)

தேவனுக்கேற்ற இருதயம்

1 யோவான் 1:10

நாம் பாவஞ்செய்யவில்லை யென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்,


மனத்தாழ்மையள்ள இருதயம், கீழ்படிகின்ற இருதயம், மனம் திரும்பும் இருதயம் ஆண்டவர் இயேசு இல்லாமல் வாழ்வு இல்லை என்கின்ற ஆவி யிலே எளிமையுள்ள இருதயம். ஒரு மனிதனுக்கு எப்போது அவசியம். அவன் ஆண்டவரை இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுக்கும் வரைக்குமா? இல்லை, இந்த உலகிலே ஒரு விசுவாசியாவன் உயிருள் ளவரைக்கும் அவன் ஆவியிலே எளிமையுள்ளவனான இருக்க வேண்டும். நான் தேவனை அறிந்து விட்டேன். அநீதி என்னிடத் தில் இல்லை. மாதந்தோறும் உப வாசிக்கிறேன்;, தவறாமல் தசமபாகம் காணிக்கைகளை செலுத்தி வருகிறேன். ஆலயத்திற்கு தவறாமல் சென்று ஜெபிக்கிறேன். எனக்கு வேதம் தெரியம் என்று வாழ்பவர்கள், தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்கின்றார்கள். வேதத்திலே காணும் முன்னோடியான பாத்திரங்களின் வாழ்க்கை ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், நிகழ்விலும் அவர்கள் தேவனையே நம்பியிருந்தார்கள். தாவீது ராஜா, உயர்விலும், தாழ்விலும், தேவனுடைய பாதத்திலே அமர்ந்திருப்பதைக் வழக்கப்படு த்திக் கொண்டார். அதனால், அவர் பாவம் செய்தபோதும், தன் குற்றங்களை நியாயப்படுத்தாமலும், தன் பாவத்தை வெளிப்படுத்த வந்த தேவ மனுஷனை தண்டித்து கொலை செய்யாமலும், தேவனுடைய பாதத்திலே விழுந்தார். இன்றைய நாட்களிலே, சில குழுவினர், இன்ன ஆண்டிலே, நான் என் வாழ்வை கர்த்தருக்கு கொடுத்தேன். அந்த நாளிலே என் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன எனவே, நான் மனந்திரும்பத் தேவையில்லை என்ற சாந்தமான குரலிலே கூறிக்கொண்டு, துணிகரமாக பாவத்திலே வாழ்ந்து கொண்டு, தங்கள் இருயத்தை கடினப்படுதிக் கொள்கின்றார்கள். தேவன் கொடுத்த சுத்த மனசாட்சியை தாங்களே சூடுண்டாக்கி, உணர்வற்றுப் போகப் பண்ணுகின்றார்கள். நீங்களோ, அவ்வண்ணமாக நடந்து கொள்ளாமல், 'நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.' என்ற வேத வார்த்தையின்படி, நாம் தேவனுக்கு முன்பாக சமுகத்திலே எப்போதும் ஆவியிலே எளிமையுள்ளவர்களாகவே இருப்போமாக.

ஜெபம்:

இனிபாவம் செய்யாதே என்று பாவிகளின் பாவங்களை மன்னித்த தேவனே, நான் எப்போதும் உமக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருக்கும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 5:14