தியானம் (தை 04, 2025)
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
மத்தேயு 5:3
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள மனிதனொருவன், அதிகார முடைவனும், சரீர பெலனுடையவனும், நீதியின்படி வாழ்பவனும், உதார குணமுள்ளவனும், அந்த ஊரின் மக்கள் மத்தியிலே பிரபு என்ற கன த்திற்குரியவனுகமாக இருந்தான். ஆனாலும், அவன் தேவனாகிய கர்த் தர் முன்னிலையிலே வரும் போது, அவருடைய பாதத்திலே, உண்மை மனதுடன், தன்னைத் தாழ்த்தி, தனக்கிருக்கும் சுய பெலத் தினாலும், தன் நீதியின் கிரியைகளினாலும், தன் ஆத்துமாவிற்கு விடுதலை யை பெற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை செய்கின்றவ னாக இருந்தான். அவன் இந்த உலகத்தோடு அழிந்து போகும் காரியங்களிலே தன் நம்பிக்கை யை வைக்காமல், அழியாமையை பெற்றக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவராகி இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவனாக இருந்தான். இவனே ஆவியிலே எளிமையுள்ளவன். கருப்பொருளாவது, ஆவியிலே எளிமை என்பது, ஒருவனுடைய பொருளாதார நிலைமையை மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லை. ஒரு சாரார், பொருளாதார நிலை மையில் ஏழை, எளியவர்களாக இருந்தும், 'புலி பசித்தாலும் புல்லுத் திண்ணாது' என்று மனதிலே அகங்காரமுள்ளவர்களாக இருந்து, தேவ னுடைய சமூகத்திலே தங்களை தாழ்த்த மறுகின்றவர்களாக இருக் கின்றார்கள். இன்னுமொரு சாரார், உலக ஐசுவரியம் மிகையாக இரு பப்தினால், தாங்கள் தேவனைத் தேடுவதைவிட, தங்களுக்குண் டான செல்வத்திலேயே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஏழைகளுக்கே தேவ நம்பிக்கை வேண்டும் என்று ஏழைகளை நகைக் கின்றார்கள். இந்த இரண்டு சாராரும், ஆவியிலே எளிளையுள்ளவர்கள் அல்லவே. தன் தகப்பனுக்கிருந்து கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்த தாவீது என்னும் இளைஞனை, தேவன் தாமே ராஜாவாக உயர்;தினார். இந்த தாவீது, யுத்தத்திலே வல்லமையுள்ள போர்வீரன். அவன் தேவ னுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். அவனுடைய சொல்லிலே வல்ல மையிருந்தது. அப்படியிருந்தும், அவன் தேவனுடைய சமுகத்திற்கு செல்வும் போது, 'இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.' என்று தன்னை தாழ்த்துகின்றவனாக இருந்தான். அவன் ராஜாவாக இருந்தும் அவன் ஆவியிலே எளிமையுள்ளவான இருந்தான். தேவன் தாவீதின் மேல் பிரியமுள்ளவராக இருந்தார். எனவே, சுய பெலத்தில் தங்கி வாழாமல் தேவ சமுத்திலே உங்களை தாழ்த்துங்கள்.
ஜெபம்:
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் தேவனே, என் சுயபெலத்திலே நான் தங்கி வாழாமல், உம்மை நம்பி, நீர் காட்டிய வழியில் வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 23:12