புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2025)

பாக்கியமுள்ள ஜனங்கள்

சங்கீதம் 33:12

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.


இன்றைய உலகிலே, பாக்கியம் பெற்றவர்கள் அல்லது ஆசீர்வதிக்கப் ட்டவர்கள் என்ற பரிசுத்த வேதாகத்திலே கூறப்பட்ட பதங்கள் வேறு பட்ட அர்த்தமுடையதாகவும், கருத்துக்கள் மாறுபட்டதாகவும் காணப்படு கின்றது. ஒரு விசுவாசியானவன், உயர் கல்வி கற்று, தாராளமாக உழை த்து, உலக ஆஸ்திகளை பெருக்கி, தன் மனைவி பிள்ளைகளோடு வாழும் போது, அவன் பாக்கியம் பெற்றவன், ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று கூறிக் கொள்கின்றார்கள். அந்த விசுவாசியின் வாழ்க்கை யிலே கர்த்தருடைய கரம் அவன் மேல் இருந்திருக்கலாம். ஒரு வேளை அவை கர்த்தரால் உண் டாயிருந்திருக்கலாம். ஆனால், ஒருவனுக்கு உயர்ந்த கல்வி, திரண்ட ஆஸ்தி மற்றும் சமுக அந்தஸ்து இருப்பதனால், அவன் நித்திய ஜீவனை அடைந்து விடக்கூடுமோ? உலகிலே வாழும் அவிசுவாசிகளுடைய வாழ் க்கையிலே அவை அதிகமதிகமாக பெருகி இருக்கின்றதை காண்கின் றோம் அல்லவா? நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான் கள்; அல்லவோ? பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். இந்த உலகிலே வாழும் விசுவாச மார்க்கத்தை சேர்ந்தவர்களில் சிலர் உலக பொருளாதாரத்தில் ஏழைகள் என்று பெயர் பெற்றிருந்தாலும், அவர்கள் விசுவாசத்திலே ஐசுவரியமு ள்ளவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா. 'வேறு சிலர் நிந்தைகளை யும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல் லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டா ர்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித் தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடி ப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.' என்னிமித்தம் உங்களை நிந் தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர் கள்;. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகு தியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே எந்நிலையிலுத் நீங்கள் கர்த்தரை பற்றிக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

உன்னத்திலே வாசம் பண்ணும் தேவனே, எந்நிலையிலும், நான் எப்போதும், உம்மை பற்றிக் கொண்டிருப்பதையே மேன்மையாக எண்ணிக் கொண்டிருக்கும் உள்ளத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:18