புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2025)

தேவ சித்தம் நிறைவேறட்டும்

யாக்கோபு 4:15

ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொ ல்லவேண்டும்.


தேவ கிருபையினாலே இன்னுமொரு ஆண்டை மட்டுமல்ல, அநேக காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஒரு நாள் உதயமாகி, பகலாகி, இரவாகி முடிவந்தது போல, கடந்த ஆண்டும் சீக்கிரமாய் கடந்து போய்விட்டது. மனிதகளுடைய நாட்காட்டியிலே புதிய ஆண்டு தோன்றுவதற்கு முன்னதாக, அதைக் குறித்து பல திட்டங்களை நாம் வகுத்துக் கொள்கின்றோம். சிலர், சில நாட் களுக்கு முன்னதாகவோ அல்லது கிழமைகளுக்கு முன்னதாகவும், வேறு சிலர், சில மாதங்க ளுக்கு முன்னதாகவும், இன்னும் சிலர் சில வருடங்களுக்கு முன்னதா கவும், அடுத்த திட்டத்தை குறித்து வகுத்துக் கொள்கின்றார்கள். திட் டமிட்டு வாழ்வதில் தவறு இல்லை. ஆனால், அந்தத் திட்டத்திற்குள்ளே ஆண்டவராகிய இயேசு எங்கே இருக்கின்றார் என்பதை நாம் நிதா னித்து அறிந்து கொள்ள வேண்டும். உலகம் நம்மை அறியாத நாட்க ளிலே, நம் நிலைமையை விசாரிக்க யாருமில்லாத நாட்களிலே, ஆண்ட வர் இயேசு நம்மை தேடி வந்தார். அவரிலே நிலை கொண்டு ஆரம்பி த்த வாழ்க்கை, ஆண்டுகள் கடந்து சென்றதும், நிலை தவறிப் போய்வி ட்டதற்கு காரணங்கள் என்ன? விசுவாசிகள் தங்கள் சொந்த பெலத்திலே திட்டங்களை போட்டு, அந்த திட்டங்களை நியாயப்படுத்துவதற்கு முய ற்சி செய்கின்றார்கள். ஒருவேளை சிறப்பாக நிறைவேறலாம் ஆனால் சுய திட்டங்கள் விசுவாசிகளை, ஆண்டவர் இயேசுவை விட்டு, தூரம் கொண்டு சென்று விடும். அத்திட்டத்திலே, அறிந்தோ அறியாமலோ மேன்மை பாராட்டுதல் உண்டாகி விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத் திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம் பாத்தியம்பண்ணு வோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நட ப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ் சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிரு க்கிறதே. ஆதலால்: ஆண் டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயி ரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.' என்ற பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. எனவே, நம்முடைய சுய திட்டங்களை ஆண்டவர் இயேசுவின் பாத்திலே வைத்துவிட்டு, தேவ சித்தத்தை நம் வாழ்விலே நிறைவேற்றுகின்றவர்களாக கடந்து செல்வோமாக.

ஜெபம்:

வருடங்களை நன்மையானல் முடிசூட்டுகின்ற தேவனே, இந்த ஆண்டிலே, என் சுய விருப்பத்தின்படி நான் காரியங்களை திட்டமிடாமல், உம்முடைய சித்தப்படி வாழ என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 65:11