தியானம் (மார்கழி 31, 2024)
வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏசாயா 49:23
நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;
'பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?' உங்களை சிறைப்பித்தவர்கள் எவ்வளவு பலமும் அதிகாரமுடையவ ர்களாக இருக்கலாம். மனித பெலத்தினால், அவர்களை ஒருவரும் விடுக்ககூடாது. சில சமயங்களிலே, நீங்கள் நீதியின்படி, செய்த குற்றங் களுக்காக தண்டனையை அனுபவிக்கலாம். ஆனால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. 'என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.' என்று தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய ஜனங்களுக்கு கூறியிருக்கின்றார். எனவே இன்னுமொரு வருடமானது இந்தப் பூமியிலே முடிவு வருகின்ற வேளையிலே, கர்த்தருக்குள் திடன் கொள்ளு ங்கள். உங்கள் சுய பெலத்தின்மேல் சார்ந்து மனம் தொய்ந்து போகாத படிக்கு, தேவ பெலன் உங்கள் ஊடாக கிரியை செய்ய இடங் கொடுங்கள். இக்கட்டும் நெருக்கமும் சூழ்ந்து கொள்ளும் போதும், இது வாழ்வு முடியும் நேரம் என்று எண்ணும் போது, ஆண்டவர் இயேசு வோடுகூட சிலுவையில் அடையப்பட்ட நல்ல கள்வன் என்று பெயர் பெற்ற மனிதனைப் போல, கர்த்தரின் இரக்கத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு, அவரிடத்தில் உங்களை ஒப்புக் கொடுங்கள். பூவுலக வாழ்வு எப்படியும் ஒருநாள் முடிவுக்கு வரும். ஆனால், கர்த்தரை நம்பியி ருக்கின்றவர்களுக்கு, அது அக்கரையிலே, நித்திய பேரின்ப வாழ்வின் ஆரம்பமாக இருக்கும். அவரை நம்பியிருக்கின்றவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. சமகாலத்திலே சில காரியங்கள் தோல்விகளைப் போல தோன்றலாம். ஆனால், கர்த்தரை நம்பி, அவருக்கா காத்திருக்கின்றவர்கள், நித்தியமான வெற்றியை பெற்று நீடூழியாய் வாழ்வார்கள். 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மற ப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. எனவே, இந்த நாளிலே, தொலைந்து போனதைபற்றி கவலையடைந்து ஒடுங்கிப் போகாமல், உங்களிடம் மிகுதியாய் இருப்பவைகளை கர்த்தரிடம் ஒப் புங் கொடுங்கள்.
ஜெபம்:
என்னை உம்முடைய உள்ளங்கையிலே வரைந்திருக்கின்ற தேவனே, உம்முடைய இரகத்திற்காக நன்றி. நான் சோர்ந்து போகாமல் உம்மைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேற நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-2