தியானம் (மார்கழி 29, 2024)
உத்தமர்களின் சுதந்திரம்
சங்கீதம் 37:18
உத்தமர்களின் நாட்களைக் கர் த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
ஒரு குடும்பதினர், சில தவிர்க முடியாத காரணங்களால், தங்கள் சொந்த ஊரைவிட்டு, வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்தார்கள். புதிதாக வந்த ஊரிலே, அவர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் கிடைக்கவில்லை. அதனால், தங்கள் செய்யக் கூடிய வேலை களை செய்து, அதனால் உண்டாகும் வருவாயிலே கையும் கணக் குமாக வாழ்ந்து வந்தார்கள். தங்களுக்கு உண்டாயிருந்த கொஞ்சத்திலும், ஒரு சிறு பகு தியை ஏழை எளியவர்களுக்கு உதவும்படி பிரித்து வைத்தார் கள். ஏனெனில் அவர்கள் நம்பிக்கை தங்கள் உழைப்பிலல்ல, வானத்தையும் பூமியையும் உண்டாக்கி தேவனாகிய கர்த்திடத்திலே இருந்தது. அதனால், அவர்கள் தங்கள் தற்போதையே சூழ்நிலையைக் குறித்தோ, தங்கள் பிள்ளைக ளின் எதிர்காலத்தைக் குறித்தோ கவலையடையவில்லை. இந்த உல கிலே தேவனை அறியாத பெரும் ஐசுவரியமுள்ளவர்கள் இருக்கின்றார் கள். அவர்களோடே கூட, சில விசுவாச மார்க்கத்தார், கர்த்தர் தங்களை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று தங்கள் உலக ஐசுவரியத்தை குறித்து மேன்மை பாராட்டி, ஏழைகளாக இருக்கும் விசுவாசிகளைப் பார்த்து, நீங்கள் இப்படி வாழத் தேவையில்லை என்று வெறும் வார்த்தைகளை கூறுகின்றார்கள். பொருளாதார நெருக்கடிகளிலே வாழும் விசுவாசக் குடும்பங்களை கவீனப்படுத்துகின்றார்கள். 'என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவ ரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரி ந்துகொள்ளவில்லையா?' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஒரு வன் தனக்காக சேர்த்து வைத்துக் கொண்டு, அதிலே மேன்மை பாராட்டுவானாக இருந்தால் அதனால் அவன் ஆத்துவாவிற்கு பலன் என்ன? கர்த்தருக்கு பயந்து, உத்தம வழியிலே நடக்கின்றவர்களின் நாடகளை கர்த்தர் அறிந்திருக்கின்றார். அவர்கள் சுதந்திரம் என்றென்றைக்கும் இரு க்கும். அவர்கள் உலகப் பொருட்களுக்கு ஊழியம் செய்யாமல், தேவ னாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்வதால், தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்த மேன்மைபாராட்டுதலே அவர்கள் வாயிலிருக்கும். அவர்கள் தங்கள் குறைவிலும் நிறைவிலும் ஏழைகளுக்கு இரங்கு கின்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேவனுக்கு பிரியமான பிள் ளைகளாக இருக்கின்றார்கள்.
ஜெபம்:
என் வாழ்வின் வழிகாட்டியாகிய தேவனே, என் உயர்விலும், தாழ்விலும் நீர் என்னோடு இருப்பதை மறந்து போய்விடாமல், உமக்கு பயந்து நீர் போதித்த வழியிலே வாழ எனக்கு பெலன் தந்து வழிநடத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 62:10