புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2024)

எதை குறித்து மேன்மைபாராட்டுவீர்கள்

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்கள் நீதியின் வழியிலே பிரயாசப்பட்டு கைநிறைய உழைத்து வந்தார்கள். ஒருவன் தாராளமாக தனக்கும் தன் குடும்தாருக்கும் நவீன தொழில்நுட்ப பொருட்களிலே செலவு செய்கின்றவனாக இருந்து வந்தான். அவன் தன் குடும்பத்தை தான் கவனித்து வருவதைக் குறித்து மேன்மைபாராட்டி வந்தான். மற் றவனோ, சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். சிக்கனமாக வாழ்ந்து வந்தவன். தன்னுடைய சிக்கனமான வாழ்கையைக் குறித்து அவன் அவ்வப்போது மேன்மைபாராட்டிக் கொள்வான். செலவு செய்கின்றவனை நோக்கி: நீ ஏன் இப்படியாக அதிகமாக செலவு செய்து உன் பணத்தை அழிக்கின்றாய் என்று தன் நண்பனை கேட்டுக் கொண்டான். அதற்கு நண்பனானவன் சிக்கனமாக வாழ்க்கின்றவனை நோக்கி: நீ சிக்கனமாக செலவு செய்து, மிகுதியான பணத்தை என்ன செய்கின்றாய் என்று கேட்டான். அதற்கு சிக்கமான வாழ்க்கின்றவன் மறுமொழியாக: நான் என் பணத்தை சேமி த்து, என் சந்ததி சுகீத்திருக்கும்படி, அவர்களுக்கு வீடுகளையும் காணிகளையும் சேர்த்து வைக்கின்றேன் என்று கூறினான். அவன் நண்பனானவன் அவனை நோக்கி: நான் இப்போது அதிகமாக செலவு செய்து அழிக்கின்றேன். நீ எதிர்காலத்தின் அழிவுக்காக சேர்த்து வைக்கின்றாய் என்று கூறினான். பிரியமானவர்களே, தேவனை அறியாத அவர்கள் அப்படியாக தங்கள் கருத்துக்களை கூறிக் கொண்டார்கள். ஆனால், தேவனாகிய கர்த்தரை அறிந்து, 'நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.' என்று கூறுபவர்க ளின் இரு விசுவாசிகள் இப்பயடியாக பேசிக் கொண்டால், இவர்களின் எவரை நீங்கள் மேன்மைப் படுத்துவீர்கள்? பரிசுத்த வேதாகமத்தின் வார் த்தைகள் எவனை மேன்படுத்தும்? ஒருவன் தன் தேவைக்கு மேலதிகமாக இருப்பதை, தற்போதைய குடும்பத்தின் சுகபோக வாழ்விற்காக தன்னுடைய நீதியாய பிரயாசத்தை செலவு செய்கின்றான். மற்றவன் தன் எதிர்கால சந்ததியின் சுகபோக வாழ்விற்காக சேர்த்து வைக்கின்றான். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலிருந்து இருவரின் இருதயமும் இந்த பூமிக்குரியதாகவே இருந்தது. உங்கள் இருதயமோ பரலோகத்திற்குரிய வைகளை நாடித் தேடுவதாக.

ஜெபம்:

என் ஆத்துமா பாதாளத்தில் அழிந்து போகாமல் காத்த தேவனே, நான் இந்தப் பூமிக்குரியவைகளை நாடித் தேடாமல், பரலோக ராஜ்யத்திற்குரியவைகளை நாடித்தேட பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 21:34