தியானம் (மார்கழி 27, 2024)
போதுமென்கின்ற மனம்
பிலிப்பியர் 4:11
ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
ஒரு கிராமத்திலே வசித்த வந்த விசுவாசியானவன், உழைப்பின் பிரயாசத்தினால் உண்டான பலனினாலே தன் தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து, சிக்கனமாக வாழ்ந்து வந்தான். அவனுடையசிக்கனமாக வாழ்க்கைகை குறித்து சிலர் விமர்சித்து வந்தார்கள். ஒரு நாள் அந்த விசுவாசியானவனின் நண்பனானவன், அவனை நோக்கி: நீ ஏன் இப்படியாக வாழ்ந்து வருகின்றாய். நீ யாருக்காக சேர்த்து வைக்கின்றாய் என்று கேட்டான். அந்த விசுவாசியானவன் சிரித்தபடி தன் நண்பனை நோக்கி: நான் யாருக்கும், எதையும் சேர்த்து வைப்பதற்கு கையிலே எதுவும் மிஞ்சுவதில்லை. என் நாளாந்த பிரயாசத்திலே என் குடும்பத்தின் தேவைகளை மட்டும் சந்திப்பதற்றாக என் பெலத்திற்கேற்றபடி வாழ்ந்து வருகின்றேன் என்று கூறினான். பிரியமான சகோதர சகோதரிகளே, சில விவாசிகள் தங்கள் நிறைவிலே சேமித்து வைக்கின்றார்கள். சிலர் தங்கள் குறைவிலே முறுமுறுக்கின்றார்கள். ஆனால், கர்த்தரை நம்பி வாழ்பவன், எந்த சூழ்நிலையிலும் மனரம்யமாக இருக்க கற்றுக் கொள் கின்றான். அவன் எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்கு நன்றியறிதலுள் ளவனாக இருக்கின்றான். ஐசுவரியம் நிறைவாக வரும்போது என் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் இருக்கின்றவனுடைய பிரச்சனைகள் ஒரு போதும் தீர்ந்து போவதில்லை. ஏனெனில் அவனுடைய பிரச்சனை யானது அவனுக்கு போதுமென்றின்ற மனம் இல்லை. எப்போதும் அதிகம் வேண்டும் என்கின்ற மனதையுடையவனாகவே வாழ்கின்றான். தேவ ஊழியராகிய பவுல், 'நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனர ம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லா வற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடை யவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.' என்று தன் பெலனாகிய கிறிஸ்துவை குறித்து அறிக்கை செய்திருக்கின்றார். உங்களுடைய பெலன் எங்கே இருக்கின்றது? உலகத்திலே வாழும் நாட்களிலே, மனரம்யமானது எதிர்காலத்திலே ஏதோ ஒரு நாள் உண்டாகும் என்று காத்திருக்காமல், கர்த்தர்மேல் உங்கள் பாரத்தை இறக்கிவைத்து வையுங்கள். நாளையைக் குறித்து கவலையடையாமல், அவருக்குள் எந்த சூழ்நிலையிலும் மனமகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிரு ந்தால் அது போதுமென்றிருக்கின்ற மனத்தை எனக்கு தந்துஇ விசுவாசத்திலே நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத் தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:6