புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 26, 2024)

அறியாத ஆழங்கள்

சங்கீதம் 46:10

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.


ஒரு மனிதனானவன், வேலை அலுவலாக வெளி ஊருக்கு சென்று அங்கே பல மாதங்கள் தங்கியிருந்தான். அவன் வீடு திரும்ப வேண்டிய நாட்கள் வந்த போது, தேசத்தின் ஒரு பகுதியிலே ஏற்பட்ட, கலவரங் களால், வந்த வழியானது அடைபட்டு போய்விட்டது. அதனால், அவன் தன் ஊருக்கு திரும்புவதற்கு கப் பல் வழியாக அநேக நாட்கள் நீண்ட பயணம் செய்ய வேண்டிய தாயிற்று. ஆரம்பம் நல்ல அனுப வமாக இருந்தது. சில நாட்களு க்கு பின்னர் கப்பல் எங்கு நிற் கின்றது என்று தெரியாதபடிக்கு கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் தண்ணீராக இருந்தது. ஒரு இர விலே ஏற்பட்ட பலத்த காற்றி னாலே, கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது. மழைமேகங்கள் சூழ்ந்து கொ ண்டது. அதைக் கண்ட, கடல் அனுபவமில்லாத அந்த மனிதனானவன் திகிலடைந்தான். எப்படியாக கப்பல் கரை சேரப்போகின்றது என்று பதற் றமடைந்து, குழப்பங்களை ஏற்படுத்தினான். அதைக் கண்ட கப்பலின் மாலுமி, அவனை அணுகி, நண்பனே, நீ இப்படியாக கலங்கத் தேவை யில்லை. இந்த புயல் மத்தியிலும் வழியை கண்டுபிடித்து கப்பலை ஓட்டிச் செல்லும் அனுபவம் எங்களுக்கு உண்டு. எனவே, கட லைப் போல நீயும் கொந்தளிக்காமல், அமைதலாக இரு. நீ போக வேண் டிய இடத்திற்கு உன்னை கொண்டே சேர்ப்போம் என்று அவனுக்கு அறி வுரை கூறி ஆறுதல் படுத்தினான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த பூவுலக வாழ்க்கையிலும் நாமும் அறியாத ஆழங்கள் போன்ற சூழ்நிலைகளால் சூழ்ந்து கொள்ளப்படலாம். அந்த வேளைகளிலே, நம்மை அழைத்த தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை சிலர் மறந்து போய்விடு கின்றார்கள். பயம் மனதை ஆட்கொள்வதால், அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார் என்பதை குறித்த சந்தேகம் மனதிலே ஆரம்பித்து விடுகின்றது. அந்த வேளையிலே, கலங்காமலும், திகையாமலும், உங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவரு டைய பாதத்திலே அமர் திருக்க அவரே தேவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வழி வனாந்திரமாகவோ, கொந்தளிக்கும் சமுத்திரமாகவோ, ஆகாயமாகவோ எப்படியாகவோ இருந்தாலும், சேனைகளின் கர்த்தர் நம்மோடிக்கின்றார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் என்பதை அறிக்கை செய்து, அந்த அறிக்கையிலே உறுதியாக நிலைத் திருங்கள்.

ஜெபம்:

பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகின்ற தேவனே, அறியாத ஆழங்களிலே என் வாழக்கைப் படகு செல்லும் போது, உம்மை சார்ந்திருந்து உம்மில் பெலன் கொள்ள என்னை வழிநடத்தி செல்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 42:16