தியானம் (மார்கழி 25, 2024)
வழிகாட்டியாகிய விடிவெள்ளி நட்சத்திரம்
வெளிப்படுத்தல் 22:16
நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
சொன்னதை செய்து முடிக்கும் பிதாவாகிய தேவன் தாமே, தம் உண்மையில் பிசகாதவர். அவர் வாக்கு மாறாதவர். மனித குலம் பாவ த்திலே மாய்ந்து அழிந்து போகாதபடிக்கு, உங்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்புவேன் என்று வாக்குரைத்தார். காலங்கள் நிறைவேறியபோது, அவர் முன்னுரைத்தபடியே, தேவ குமாரானாகிய இயேசு இந்த பூவுலகிலே மனிதனாக உதித்தார். வாக்குரைக்கப்பட்ட மெசியாவாகிய இயேசு தாமே, பிதாவாகிய தேவ னுடைய சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். ஆண்டவராகிய இயேசு வின் முதலாம் வருகையின் முன்ன றிவிப்பு நிறைவேறின நாளை நாம் இன்று நினைவு கூருகின்றோம். பலர் இந்த நாளை பலவிதமாக கொண்டாடுகின்றார்கள். சிலர், இந்த நாளை வியாபாரமயமாக்கி தங்களுக்கு ஆதாயம் உண்டாக்கும் வழிகளை நாடித் தேடுகின்றார்கள். வேறுசிலர், உலக களியாட்டுகளையும், தங்கள் ஆசை இச்சைகளை நிறைவேற்றும்படிக்கும் புதிய வழிகளை நாடித் தேடுகின்றார்கள். இன்னும், சிலர் இந்த நாளை கொண்டாடாமல் இருப்பதற்கு நியாயங்களை நாடித் தேடுகின்றார்கள். ஆனால், நாமோ, முன்குறித்தபடி முதலாம் வருகையை நிறைவேற்றியவர், முன்னுரை த்தபடியே இரண்டாம் தடவை வருவார் என்பதை விசுவாசித்து அறி க்கை செய்கின்றோம். 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தி னவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமு ள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலை பாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாகவுமிருக்கிறேன் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.' பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாமும், வாழ்வின் வழிகாட்டியுமாக இருக்கும் அவரையே பின்பற்றுங்கள். அவருடைய வருகை நாளை எதிர்பார்த்து முன்னேறுங்கள்.
ஜெபம்:
அன்பின் பிதாவாகிய தேவனே, நான் மாயைக்குள் அழிந்து மாண்டு போகாமல், நித்திய வாழ்வை அடையும்படிக்கு நீர் அனுப்பின உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவுக்காக நன்றி இன்றும் என்றும் செலுத்துகின்றோம். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 2:9-11