புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2024)

தேவனுக்கேற்ற கிரியைகள்

யோவான் 6:29

அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.


அக்காலத்திலே வனாந்திரத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ஜன ங்கள் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை புசித்தார்கள். ஆண்ட வராகிய இயேசுவின் போதனையை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்கள் பலுகிப் பெருகின அப்பங்களை புசித்தார்கள். அந்த உணவால் அவ ர்கள் சரீரத்தில் ஏற்பட்ட பசி அடங்கியது. ஆனால் அவர்கள் ஆத்துமா வோ இளைப்பாறுதலை காண வில்லை. அவர்கள் மாம்ச இச் சைகள் நிறைந்தவர்களாய் இரு ந்தார்கள். வனாந்தரத்திலே மன் னாவை உண்டவர்கள், தங்களை வழிநட த்திச் சென்ற மோசேக்கு எதிராக கலகம் பண்ணினார்கள். ஆண் டவர் இயேசுவின் போதனையை கேட்டும், உணர்வடையாமல் இருந்த வர்கள் அப்பம் உண்ட பின்பு, ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (யோவான் 6:26). அவர்கள் அதனால் தங்கள் வயிற்றுப் பசியை ஆற்றினார்களே தவிர ஆன்மீக விடுதலையை பெற் றுக் கொள்ளவில்லை. இன்றைய நாட்களிலும், ஆண்டவராகிய இயே சுவே நம் வயிறாற உண் ணும்படி நம்மைப் போஷpக்கின்றார். அதை ஏன் என்று உணராமல், வயிராறும்படி உண்ணும் ஆகாரத்தையே நாடித் தேடுவோமாக இருந்தால், வனாந்திரத்தில் இருந்தவர்கள் போலவும், வறிறாறும்படி ஆண்டவர் இயேசுவை பின்பற்றிய ஜனங்களைப் போல வும், நாமும் ஆண்டவரா கிய இயேசுவின் வார்த்தைகளால் உண்டாகும் ஆன்மீக விடுத லையை அற்பமாக எண்ணிவிடுவோம். 'ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந் தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்தி லிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத் தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப் பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடு க்கும் என் மாம்சமே என்று மீட்பராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே 'அழிந்துபோகிற போஜ னத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜன த்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;'. அருமையான சகோதர சகோதரிகளே, கல்வி, வேலை, அந்தஸ்து, ஆஸ்தி என்று அழிவுக்குரியவை களிலே தங்கி வாழாமலும், அவைகளையே உங்கள் வாழ்விலே நாடித் தேடாமலும், நித்திய வாழ்விற்கு வழிகாட்ட இந்தப் பூமிக்கு வந்த ஆண்டவர் இயேசுவை விசுவாசியுங்கள். அவரை விசுவாசித்தால், அவர் கூறிய வழியிலே நடவுங்கள். அவர் நம்முடைய தேவைகள் என்ன வென்று அறிந்திருக்கின்றார்.

ஜெபம்:

இரட்சண்யத்தை இந்த உலகிற்கு அனுப்பி ஜீவனுள்ள பிதாவேஇ இந்த உலகிலுள்ள வழிகாட்டிகளை அல்லஇ நீர் அனுப்பிய வழிகாட்டியா கிய உம்முடைய திருக் குமாரனின் வழியிலே என்னை நடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:50