புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2024)

நம் இலக்கு இம்மைக்குரியதல்ல

1 கொரிந்தியர் 15:19

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.


அநியாயங்கள் மலிந்து கொண்டிக்கும் இந்த உலகிலே நீதி நியாயமான வழியிலே வாழும்படிக்கும், இருள் சூழந்திருக்கும் ஸ்தலத்தை பிரகா சிக்கும்படிக்கும் பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஏற்படுத்தியிருக் கின்றார். கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே சகல ஆவிக்குரிய ஆசீ ர்வாதங்களினாலே நம்மை ஆசீர்வதித்திருக்கின்றார். இந்த அழைப்பின் நோக்கம் என்ன? அவருடைய தெரி ந்து கொள்ளுதலின் தார்ப்பரியம் என்ன? இந்த உலகிலே பிறந்து, சௌகரியமாக வாழ்;ந்து, கல்வியை கற்று, கைநிறைய உழைத்து, நல்ல திருமணத்தை செய்து, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும்படிக்காகவா? ஒருவனுடைய வாழ்விலே இவை யாவும் சீரும் சிற ப்புமாக இருந்தால், அவன் தேவ னாலே ஆசீர்வதிக்கப்பட்டவன் என் றும், அவனை கிறிஸ்தவன் என்று கூறவிடமுடியுமா? அவன் நித்திய ஜீவனை அடைந்து விடுவான் என்று உறுதி செய்ய முடியுமா? ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் தேவைகள் என்னவென்று பரம பிதா அறிந்திருக்கின்றார். ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனாகாது. அவிசுவாசிகளாகவே வாழும் பலர், தங்கள் சரீரங்களை ஆரோக்கியத்துடன் பேணி பாது காக்கின் றார்கள். அநேக ஆண்டுகள் கணவன் மனைவியாக உயிர் வாழ்கின்றா ர்கள். விதைப்பும் அறுப்பும் என்ற மாறாத பிரமாணத்தின்படி அவர்கள் தங்கள் பிரயாசத்தின் பலனை கண்டு கொள்கின்றார்கள். ஆனால், தேவ கிருபையானது வெளிப்பட்ட பிரதானமான நோக்கத்தை நாம் மறந்து விடக்கூடாது. நித்திய ஜீவனுக்கென்று மேலாக அழைப்பை பெற்றிருக் கின்றோம். பரம தேசத்தின் யாத்திரிகர்களாக இந்த உலகத்ததை கட ந்து கொண்டிருக்கும் நாம், நித்தியமானதை பெற்றுக் கொள்ளும்படி நித்தியராகிய ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய அக்கிரமத்திலேயே அழிந்து போகாதபடிக்கு, மூடப்பட்ட பரலோகத்தின் வாசலை திறந்து, செல்ல வேண்டிய பாதையை காட்டு ம்படிக்கு அவர் வழிகாட்டியாக இந்தப் பூமிக்கு வந்தார். எனவே, வீடு, பாடசாலை, வேலை, திருமணம், ஆரோக்கியம், உல்லாசப் பயணம் என்று உங்கள் நோக்கத்தை அவைகளிலேயே பதித்துவிடாமல், நித்திய வாழ்வின் வழிகாட்டியாகிய இயேசுவையே பின்பற்றுங்கள்.

ஜெபம்:

நித்தியமான பரம தேசத்திலே நீடுழியாக வாழ என்னை அழை த்த தேவனே, இந்த உலகத்தின் சுகபோகங்களிலே நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, அழைப்பின் நோக்கத்தை பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 3:5-6