தியானம் (மார்கழி 20, 2024)
தீர்க்கதரிசியும் ஏழை விதவையும்
சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியை யும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
தேசத்திலே மழை பெய்யாதபடியினாலே, எலியா வாழ்ந்த வந்த இடத்திலிருந்து கேரீத் ஆற்றின் தண்ணீர் வற்றிப் போயிற்று. அந்த வேளையிலே கர்த்தர் எலியாவை நோக்கி: நீ எழுந்து, சாறிபாத் ஊருக்கு போய், அங்கே தங்கியிரு, உன்னை பராமரிக்கும்படி அங்கே இருக்கின்ற ஒரு விதவைக்குக் கட்டளை யிட்டேன் என்றார். அந்த விதவை யின் பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெ யுமே இருந்தது. அந்த கடைசி ஆகாரத்தை, அவளும் அவன் குமார னும் சாட்பிட்டு பின்னர் பஞ்சத்தினால் செத்துப்போவதற்கு அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். எனினும், அவன் தேவனு டைய தீர்க்கதரிசியாகிய எலியாவின் வார்த்தையின்படி, தன்னிடமி ருந்து கொஞ்சத்திலே, முதலாவதாக தீர்க்கதரிசிக்கு அடையை செய்து கொடுத்தாள். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோகவில்லை. கலசத்தின் எண் ணெய் குறைந்து போகவுமில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, நீதிமான அப்பத்துண்டுக்கு இரங்குவதில்லை. 'சிங்கக்குட்டிகள் தாழ்ச் சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது' என்றும் 'நான் இளைஞனாயிருந்தேன், முதி ர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.' தாவீது ராஜா பாடியிருக்கின்றதை பரிசுத்த வேதாகமத்தின் சங்கீதப் புத்த கத்திலே வாசிக்கலாம். ஐசுவரியம் பெருத்தவர்கள் தங்கள் ஐசுவரிய த்தில் நம்பியிருக்கின்றார்கள். இந்த உலகத்தினால் உண்டான அந்த ஐசுவரியம் இந்த உலகத்தைப் போல அழிந்து போய்விடும். ஆனால், வானத்தையும், பூமியையும், அதிலுள்ள யாவையும் படைத்த, நேற்றும் இன்றும் மாறாத கர்த்தரை நம்பியிருக்கின்றவனா பாக்கிவானாக இருக் கின்றான். அவர் அவனுடைய கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிக்கி ன்றார். தன்னுடைய பிள்ளைகள் நீதியின் வழியிலே பிழைப்பதற்கு கற்றுக் கொடுகின்றார். ஆனால், மிகையான மழையினாலும், அதிக வற ட்சியினாலும் அவர்கள் பிரயாசங்கள் பலனற்றுப் போகும் வேளைக ளிலும், ஆபத்துக் காலங்களிலும் அவர் தம்முடையவர்களை அதிசய மான வழிகளிலே போஷpக்கின்றவராயி ருக்கின்றார்.
ஜெபம்:
உன்மேல் என் கண்கள் வைத்து ஆலோசனை தருவேன் என்று சொன்ன தேவனே, என் உயர்விலும்இ தாழ்விலும், ஆபத்துக் காலங்களிலும் உம்மையே நம்பியிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 58:11