தியானம் (மார்கழி 18, 2024)
என் தேவைகளை சந்திப்பவர்
பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவா க்குவார்.
நாங்கள் பாடுபட்டு உழைக்கின்றோம்! இது எங்கள் கையின் பிரயாசம்! என்று தங்கள் சுயபெலத்தைக் குறித்து தேவனை அறியாத அவிசுவாசிகள், தங்கள் அறியாமையிலே தங்களைத் தாங்களே மேன்மை பாராட்டிக் கொள்கின்றார்கள் என்பதைக் குறித்து கடந்த நாளிலே பார்த்தோம். உழைப்பதும், பிரயாசப்படுவதும் அவசியம் ஆனால், நல்லோர் மேலும், தீயோர் மேலும் தமது சூரியனை உதிகப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யச் பண்ணுகிறார் (மத்தேயு 5:45) என்று அறிந்த சில விசுவாசிகள் கூட, பாதி வழியிலே இந்த உண்மையை மறந்து போய்விடுகின்றார்கள். பறவைகள், மிருகங்கள், ஜீவனுள்ளவைகள் யாவும் ஆகாரத்திற்காக படைத்தவரை நோக்கி பார்கின்றன. ஏற்ற வேளையிலே அவைகளை அவர் போஷிக்கின்றார். ஆனால், சில தேவ பிள் ளைகளோ, கல்வி, கடும் உழைப்பு, சமூக அந்தஸ்துக்கள் மற்றும் தொடர்புகள் (Network) என்று அவைகளை தங்கள் வாழ்விலே மேன்மைப் படுத்துவதால், தேவன் பேரில் விசுவாசமாக இருப்பவர்களை காணும் போது, அது அவர்களுக்கு அற்பமாக தோன்றிவிடுகின்றது. தேவனை அறிந்திருக்கின்றோம் என்று தங்கள் சுயபெலத்திலே தங்கி வாழ்ப வர்கள் தங்கள் எஜமானன் யார் என்பதை மறந்து போனவர்களாக இரு க்கின்றார்கள். 'மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னயையும் அறியும், தம்முடைய ஜனங்கள் அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கின்றது' என்று தேவனாகிய கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசி வழியாக உரைத்திருக்கின்றார். ஆரம்பத்திலே நன்றாக ஓடிய இவர்கள், பாதி வழியிலே, அறிந்தோ அறியாமலோ தங்கள் சுய பெலத்தை மேன்மைப் படுத்த ஆரம்பித்துவிடுகின்றார்கள். இவர்கள் தேவன் மேலே விசுவாசமுள்ளவர்களாக இருந்தபோது, உபவாசங்கள், ஜெப கூட்டங்கள், வேதப்படிப்புக்ள், ஐக்கியங்கள் யாவும் அவசியமானதாகும் மேன்மையாதாகவும் இருந்தது. பின்பு, உலக தொடர்புகள் இவர்கள் வாழ்விலே செல்வாக்கு செலுத்தும்போது, முன்பு மேன்மையாக தோன்றின யாவும் இவர்களுக்கு அநாவசியமாக தோன்றிவிடு கின்றது. இது அவர்கள் வாழ்விலே வேதனைகளுக்கு ஆரம்பமாய் இருக்கும். எனவே, நீங்களோ எப்பொழுதும் வாழ்வின் வழிகாட்டியாகிய கர்த்தரையே சார்ந்து வாழுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, என் வாழ்வின் ஆதாரம் நீர்தான் என்ற உண்மையைவிட்டு நான் ஒருபோதும் விலகி, இந்த உலகத்தின் போக்கில் என் வாழ்வை அழித்து விடாதபடிக்கு, உம்மைப் பற்றிக் கொண்டு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஆதியாகமம் 22:14