புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2024)

போஷக்கின்றவர் யார்?

சங்கீதம் 147:9

அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங் கொடுக்கிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சிறு பையனொருவன் தன் தயாருடன், ஆலயத்திற்கு சென்று ஞாயிறு ஓய்வுநாள் பாடசாலையிலே மிகவும் வாஞ்சையுடன் கலந்து கொண்டான். அவனுடைய தந்தையார் தேவ பக் தியில்லாதவராக இருந்த போதும், ஆலயத்திற்கு சென்றால், பிள்ளை கள் நல் வழியிலே நடத்தப்படுவார் கள் என்பதினால், தன் மகனான வனை தடை செய்யாதிருந்தான். ஒரு நாள் இரவு ஆகாரத்திகாக குடும்ப மாக ஆயத்தப்பட்ட போது, சிறு பையனானவன், ஆகாரத்தை கொடு த்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தி ஜெபம் செய்தான். அதை கேட்ட அவனுடைய தந்தையார், நான் எவ்வளவாக கஷ;டப்பட்டு வேலை செய்து மேசையிலே ஆகாரத்தை போடுகின்றேன், நீ எப்படி தேவனு க்கு நன்றி சொல்வாய் என்று கேட்டுக் கொண்டார்;. இந்த உலகத்தை படைத்த தேவனே உங்களுக்க வேலையை கொடுத்த்திருக்கின்றார் என்று அந்த சிறுபையனானவன் தன் தந்தையாருக்கு பதிலளித்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, பூமியும் அதன் நிறைவும் கர்த ருடையது. தேவனானவர் மனிதர்களுக்கு கொடுத்த சுயாதீனத்தை அவ ர்கள் துஷ;பிரயோகம் செய்து, தங்களுக்கென்று சில வழிகளை ஏற்ப டுதிக் கொண்டு, தேவனையும், அவரை விசுவாசிக்கின்றவர்களையும் பரியாசம் செய்கின்றார்கள். தேவனானவர்; அதை அறிந்திருந்தும், அவர்கள் அறியாமையின் நிமித்தம் அவர்களை தண்டிக்காமல், ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்ற நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். 'அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.' (மத்தேயு 6:45). விதைப்பும் அறுப்பும் என்ற மாறாத பிரமாணத்தின்படி, தன்னை அசட்டை செய்கின்றவர்களும், உணவு உண்ணத்தக்கதாவும், உடுக்கத்தக்கதாவும், உறங்கத் தங்கதாவும் தம்முடைய இரகத்ததை காண்பிக்கின்றார். நித்திய ஜீவனைக் குறித்து அறியாமல் இருளடைந்தி ருக்கும் இருதயத்திற்கு, பரம பிதா பிழைப்பூட்டுகின்றார் என்ற உணர்வு எப்படி ஏற்படும்? எல்லா ஜீவன்களின் கண்களும் அவரை நோக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்ற வேளையிலே அவர் அவைகளுக்கு ஆகார ங்கொடுக்கின்றார்;.' ஒருவேளை உங்களுக்கு வேலையற்றறுப் போனா லும், கர்த்தர் போஷpக்கின்றவராக இருக்கின்றார்.

ஜெபம்:

எங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்கும் தேவனே, உயர்விலும், தாழ்விலும் நான் வழிகாட்டும் உம் வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 4:4