புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2024)

நீங்கள் நாடித் தேடுபவைகள்

மத்தேயு 6:26

அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்; அவை களைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?


இன்றையிலே உலகிலே வாழ்க்கையின் பெரும்பகுதியை மனிதர்கள் கற்றுக் கொள்ளவதிலே செலவிடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று, பெற்றோர்கள், அய ராது உழைக்கின்றார்கள், சில வேளைகளிலே தங்கள் பெலனிற்கும் நிர் வாகத்திற்கும் அப்பாற்பட்ட சிற ந்த பாடசாலைகளிலே தங்கள் பிள் ளைகளை சேர்த்துக் கொள் கின்றார்கள். காரணம் என்ன? அவ ர்கள் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவா? அல் லது இந்த உலகிலே, படித்து பட் டம் பெற்று, சமுகத்திலே கௌர வத்துடன் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகவா? இந்த உலகத்தி னால் உண்டான படிப்புக்களினாலும் பட்டங்களினாலும் ஒருவனும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியாது. ஊர், உலகறியாத குக்கிராமங்களிலே வசிக்கும் கல்வறிவற்ற ஏழைகள் விசுவாசத்திலே உறுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். பிள்ளைகளின் நலன் கருத்தி, பெற்றோர் அயராது வேலை செய்கின்றார்கள். சில விசு வாசிகள் சபை ஆராதனைகளுக்கும் சமூகமளிக்காமல், தங்கள் வேலைகளை முக்கிய த்துவப்படுத்துகின்றார்கள். எதற்காக இதை நாடித் தேடுகின்றார்கள்? 'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்ன த்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண் டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப் பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகை யால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னு டையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.' என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கி ன்றார். மனிதர்களை மட்டுமல்ல, உயிரினங்கள் யாவையும் கூட நம் முடைய பரமபிதா பிழைப்பூட்டுகின்றார். எனவே, நீங்கள் தேவ பயமற்ற அஞ்ஞானிகளைப் போல, அவர்கள் வழியிலே நடக்காமலும்;, அவர்கள் பெருமைபாராட்டும் காரியங்களை பற்றிக் கொள்ளாமலும், வாழ்வின் வழிகாட்டியாகிய வேதத்தின் வெளிச்சத்திலே நடவுங்கள். அவ்வழி யிலே நடக்கின்றவர்கள் இடறிப்போவதில்லை. அவர்கள் வாழ்விலே சமாதானம் தங்கும். அந்த வார்த்தையிலே நித்திய ஜீவன் உண்டு.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, நான் என் வாழ்வின் மேன்மையான நோக்கத்தை உணர்ந்து, உம்முடைய வழிகாட்டும் வார்த்தையின்படி மேலானவைகளை நாடித் தேடும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:6