தியானம் (மார்கழி 15, 2024)
அதிசயங்கள் செய்யும் தேவன்
யோபு 9:10
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
ஒரு ஊரிலே, யுத்த நாட்களிலே மாலை வேளைகளிலே ஊரடங்கி, போக்கும் வரத்தும் இல்லாமல் எல்லாரும் தங்கள் வீட்டிற்குள்ளே இரு ந்து வந்தார்கள். ஊழியர்களோ, உத்தியோகத்தர்களோ எந்த அலுவ லுக்கும் தங்கள் வீட்டுக் கதவை திறக்காத பயங்கரமான காலமாக இரு ந்தது. அந்த ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனுக்கு மரணத்திற்கேது வாக காய்ச்சல் உண்டாயிருந்தது. அவனுடைய குடும்பத்தார் முக்கிய அலுவலாக வெளியூருக்கு சென்றி ருந்ததால், மத்தியான வேளையிலே அவனுடைய நண்பனொருவன் அவனை தூரத்திள்ள வைத்தியரிடம் அழைத்து சென்றான். அவர் மேலோட்டமாக பரிசோதனை செய் துவிட்டு, சில மாத்திரைகளை கொடுத்தனுப்பினார். அன்று இராத்திரியலே அவனுடைய உடல் மிகவும் பெலவீனமுற்று கடுமையான வேத னைப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த இடத்திலிருந்தவர்கள் ஜெபம் செய்தார்கள். அவனுடைய நண்பனானவன், அந்த ஊரிலே வாழ்ந்து வந்த அனுபமிக்க சிரேஷ்ட வைத்தியரின் வீட்டுக்குச் சென்ற அவ ருடைய கதவை தட்டினான். ஆனால், வைத்தியருடைய வீட்டிலிருந்த எவருமே கதவை திறக்க துணியவில்லை. அந்த அயலிலே வாழ்ந்த விசுவாசக் குடும்பமொன்றை சேர்ந்தவளும், வைத்திய சாலையிலே தாதியாக வேலை பார்த்து வந்த சகோதரியொருவர், அந்த வாலிபனுடைய வீட்டி ற்கு சென்று காய்ச்சலை தணிக்கும்படிக்கு தனக்கு தெரிந்த வைத்தியங்களை செய்தாள். பின்பு, தன் செல்வாக்கை பயன்படுத்தி, அதே சிரேஷ்ட வைத்தியரிடம் சென்று, தன் குரலைக் காண்பித்து, வைத்தியரோடு பேசி, அவருடைய கதவை திறக்க வைத்து, அவரை அழைத்து வந்து, அந்த வாலிபனுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டாள். அந்த வைத்தியரும் அந்த இராத்திரியிலே அவ்விடத்திற்கு வந்து, அந்த வாலிபனுக்கு வைத்தியம் செய்தார். தேவனாகிய கர்த்தர், அந்த சகோதரியை அந்த வாலிபனுடைய வீட்டிற்கு அனுப்பி, மனித தயவை ஏற்படுத்தி, அந்த வாலிபனுக்கு கிருபை செய்தார். பிரியமானவர்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய வழிகள் அதிசயமானவைகள். மரண பயங்கரங்கள் சூழ்ந்திருந்த அந்த இருளான காலத்திலே, தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைக்கு நன்மை செய்யும்படி சாத்தி யமற்ற காரியத்தை, அறியாத இடத்திலிருந்து நடப்பித்து முடித்தார். எனவே நன்மைகள் செய்யும் அவரையே பற்றிக் கொண்டிருங்கள். அவருடைய வழிநடத்து தலுக்கு இடங் கொடுங்கள்.
ஜெபம்:
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை செய்யும் தேவனே, நீர் ஏற்படுத்துகின்ற வழிகளுக்கு முரணாக நான் எண்ணங்கொள்ளாதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 118:1