தியானம் (மார்கழி 12, 2024)
விசுவாசி மரித்தாலும் பிழைப்பான்
யோவான் 11:25
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்
சில விசுவாசிகள் தங்கள் சரீரங்களிலே நோய்கள் ஏற்படும் போது வைத்தியரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளையும், நோய்ளுக்கான மருந்துகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள்;. ஆனால் சுகமும் ஆரோக்கிய மும் கர்த்தரிடத்திலிருந்து, அவருடைய நேரத்திலே உண்டாகின்றது. ஏனெனில் மருந்து எடுப்பவர்கள் எல்லாரும் சுகத்தை கண்டடைவதி ல்லை. வேறு சில விசுவாசிகள், எப் படிப்பட்ட நோய்கள் சரீரத்திலே ஏற் பட்டாலும், வைத்தியரிடம் செல்வ தில்லை, மருந்துகள் ஏதும் எடுப்பதில்லை. மாறாக சுகம் தேவனால் வரும் என்று தரித்திருக்கின்றார் கள். அது அவர்களுடைய சொந்த தீர்மானம். ஆனால் சுகமும் ஆரோக்கியமும் கர்த்தரிடத்திலிருந்து, அவருடைய நேரத்திலே உண்டாகின் றது. ஏனெனில் மருந்து எடுக்காதவர்கள் எல்லாரும் சுகத்தை கண்ட டைவதில்லை. எலியாவின் இரட்டிப்பான வல்லமையைப் பெற்ற விசு வாச வீரனாகிய எலிசா என்னும் தீர்ககதரிசியானவர், அவருடைய காலம் நிறைவேறிய போது, மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்;. கருப்பொருளாவது, ஒருவன் விசுவாசியாக இருந்தாலும், அவவிசுவா சியாக இருந்தாலும், ஒருநாள் மரிக்க வேண்டும். விசுவாசத்திலே நிலை த்திருந்து சுகம் பெற்ற அநேக முன்னோடிகளை வேதத்திலும், கடந்த காலங்களிலும், நாம் வாழும் இக்காலத்திலும் கேள்விப்பட்டிருக்கி ன் றோம். அது போலவே, இப்படியாக மருந்துகளை எடுக்காமல், அற்புத அடையாளங்களோடு சுகம் பெற்றவர்கள், உலக ஆசைகளால் இழு ப்புண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பின்மாற்றமான வாழ்க்கைக்கு திரு ம்பியிருப்பதையும் நாம் காண்கின்றோம். கருப்பொருளாவது, மருந்து களை எடுப்பவர்களானாலும், மருந்துகளை எடுக்காதவர்களானாலும், தங்கள் வாழ்கையிலே வரும் எல்லா போராட்டங்களின் மத்தியிலும், ஆண் டவராகிய இயேசுவின் மேல் கொண்ட விசுவாசத்திலே நிலைத்திருப் பானாகில் அவன் ஆத்துமாக மரித்துப் போவதில்லை. 'நானே உயிர் த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித் தாலும் பிழைப்பான்;. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவ னெவ னும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;' என்பதை நாம் விசுவா சித்து, நம்முடைய நித்திய வழிகாட்டியும் மெசியாவுமாகிய ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்த பிரதானமானதும் அவசியமானதுமான அநாதி நோக்கம் நம்மில் நிறைவேறும்படிக்கு, ஆத்தும மீட்புக்குரிய வைகளை பற்றிக் கொண்டிருப்போமாக.
ஜெபம்:
என்னை நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, உம்முடைய முதலாம் வருகையின் நோக்கத்தை நான் உணர்ந்து அதை என் வாழ்வில் நிறைவேற்ற பிரகாசமுள்ள மனக்கண்களை எனக்கு தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 38:1-9