புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2024)

முடிவுபரியந்தம் நிலைநிற்பவைகள்

2 கொரிந்தியர் 4:18

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவனின் உடலிலே சுகவீனம் ஏற்பட்டபோது, அவன் தான் வைத்தியரிடம் செல்வதில்லை, மருந்தெடுப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டதால், அவன் தன் வீட்டின் பின்புறத்திலே இருந்த மூலிகை செடியின் சில இலைகளை கொய்து, அரைத்து சம்பலாக்கி, உணவோடு உட்கொண்டான். சில நாட்களிலே அவன் சுகமடைந்தான். அவன் அயலிலே வாழ்ந்த தேவ பக்தியுள்ள இன்னுமொரு மனிதனனான வன், அந்த விசுவாசியைப்; போல சுகவீன முற்றபோது, ஊரிலுள்ள மருத்துவரிடம் சென்று சில மாத்திரைகளை பெற்றுக் கொண்டான். தேவ பக்தியுள்ள மனிதனானவன் வீடு திரும்பும் போது, அயலிலே வாழ்ந்த மனிதனொருவன்;, அவனை நோக்கி: நீ மருத்துவரிடம் சென்றாயா? உனக்கு தேவனிடத்தில் விசுவாசம் இல்லையா என்று அவனை கடிந்து கொண்டான். அதற்கு அந்த மனிதனானவன்: சகோதரனே, நீ வீட்டின் பின்புறத்திலுள்ள மூலிகைச் செடியின் இலைகளை அரைத்து அதன் சாரை உட்கொண்டு சுகமடைந்தாய்;. நான் பார்கச் சென்ற மருத்துவர், அதே மூலிகைகளை அரைத்து, மாத்திரையாக்கி வைத்திருந்தார். அவர் அதை எனக்கு கொடுத்தார். மூலிகை செடியின் இலைகளை உண்டால் விசுவாசம், ஆனால் மூலிகையின் இலைகளை மாத்திரையாக்கி உண்டால் அவிசுவாசமா என்று கேட்டான். அதற்கு அந்த விசுவாசியானவன் பதில் கூறமுடியாமல் வாயடைத்துப் போனான். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தரால் கூடாத காரியம் ஒன்று மில்லை. இந்த பூமியிலேயுள்ளதும், மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் பூரணமானவைகளோ, நிரந்தரமானவைகளோ அல்ல. சிலர் மாத்திரைகளை தவிர்த்துக் கொள்வதற்காக இயற்கை மூலிகைகளை மருந்தாக எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர், இயற்கையிலிருந்து உரு வாக் கப்பட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்றார்கள். எல்லா மருந்துகளும், மாத்திரைகளும், மூலிகைகளும், அவைகளை உட்கொண்ட எமது உடலும் அழிந்து போகும். இந்த உலகிலே நாம் வாழும் நாட்கள் குறுகியது, எனவே, பிரயோஜனமற்ற வாக்குவாதங்களுக்கும், கருத்தற்ற தர்க்கங்களிலேயும் உங்கள் நேரத்தை விரயமாக்காமல், சோர்ந்து போகா மல் அழியாமையை நாடித் தேடுங்கள. உங்கள் புறம்பான மனுஷக்குரியவைகளை பற்றிக்கொள்ளாமல், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதற்குரியவைகளையே மேன்மைப் படுத்துங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே, நான் உம்முடைய வழி நடத்துதலின்படி வாழ்ந்து மேன்மையானவைகளை நாடித் தேட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2