தியானம் (மார்கழி 10, 2024)
வாழ்விலே முக்கியமானது எது?
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடு க்கப்படும்.
திருமண வயதை அடைந்த ஆண்கள் தங்கள் மனவி எப்படி இருக்க வேண்டும் என்று மனதிலே ஒரு பட்டியலைப் போட்டு வைக்கின்றார்கள். அதுபோலவே, பெண்களும், தங்கள் வருங்கால கணவர் இப்படியாக இருக்க வேண்டும் என்று பல காரியங்களை தங்கள் மனதிலே வைத் துக் கொள்வார்கள். திருமண வயதையடைந்த பிள்ளைகளையுடைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு இப்படியான சம்மந்தம் வர வேண்டும் என்ற தங்கள் பட்டிய லை வைத்துக் கொள்வார்கள். இவைகள் சாதாரமாண விசுவாசிகள், அவிசுவாசிகள் யாவரும் செய்து வருகின்றார்கள். இவைக ளிலே வெளித்தோற்றம், ஏற்ற குடு ம்பம், ஆஸ்தி, கல்வி, அந்தஸ்து என்பவைகள் பொதுவாக காணப் படும் சில அம்சங்களாக இருக்கும். அதாவது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுடைய பெற்றோராக இருந்தாலும், தாங்கள் விரும்பும்படி நடக்கின்றவர்கள், தாங்கள் விரும்பும் காரியங்களை செய்கின்றவர்களையே அதிகமாக விரும்பவார்கள். உலகத்தின் ஒரு பகுதியிலே வாழ்பவர்கள் பொருத்தங்களை பார்க்கும்படி நட்சத்திர ங்களை நாடுகின்றார்கள். உலகத்திலே மறுமுனையிலே வாழ்கின்றவர்கள், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும் பொரு த்தங்களை பார்க்கும்படிக்கு இல்லற வாழ்க்கையையும் ஒத்திகை பார்கின்றார்கள். அவர்கள் பார்க்கும் பொருத்தத்தின் தார்ப்பரியம் என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள். எதற்காக பொருத்தத்தை பார்க்கின்றார் கள்? பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தங்கள் குடும்ப வாழ்விலே நிறைவேற்றும்படியாகவா? அல்லது இந்த உலகத்தின் போக்கினால் வரையறுக்கப்பட்டு, அவிசுவாசிகளினால் அங்கீகரிக்கப்பட்ட குடும்ப வாழ் க்கையை வாழும்படிக்காகவா? விசுவாச மார்க்கத்தார் மத்தியிலும், உல கபோக்குக்குரிய அம்சங்களையே முதன்மைப்படுத்தும் காலமாக இரு ப்பதை நாம் காண்கின்றோம். பிரியமானவர்களே, தேவன் இருதங்க ளை ஆராய்ந்தறிகின்றார். திருமண ஒப்பந்தங்களிலே நீங்கள் எதை மன தார முக்கியதுவப்படுத்தி வருகின்றீர்கள் என்பதை நீங்களே உங்கள் வாழ்விற்கு வழிகாட்டும் தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய் ந்து பாருங்கள். முதல் உலக பொருத்தம், பின்பு தேவ பொருத்தம் என்று வாழாமல், தேவனுயை ராஜ்யத்தையே முதன்மைப் படுத்தி வாழுங்கள்.
ஜெபம்:
வாழ்விற்கு நல்ல ஆலோசனை தரும் தேவனே, நான் என்னு டைய குடும்ப வாழ்விலே, எப்போதும் மேலானவைகளை தேடுவதையே முதன்படுத்தும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:24-29