தியானம் (மார்கழி 08, 2024)
வழிகாட்டும் வார்த்தைகள் எதற்கு?
சங்கீதம் 103:8
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
அநேக ஆண்டுகளாக சபையிலே இருந்து வந்த விசுவாசியானவனின் மகனானவன், அந்த ஊரிலுள்ள பெண்ணொருத்தியை தான் திருமணம் செய்யப் போவதாக தீர்மானம் செய்து கொண்டான். அதை அறிந்த சபையின் மேய்ப்பரானவர், அந்த வாலிபனானவன், அந்நிய நுகத்திலே பிணைக்கப்பட்டு, தன் வாழ்விலே வேண்டப்படாத விளைவுகளை உண்டு பண்ணப் போகின்றான் என்று மிகவும் கரிசனை கொண்டார். அதனால், அவர் அந்த வாலிபனானவனுடைய தகப்பனாரை சந்தித்துப் பேசும்ப டியாக சென்றிருந்தார். மேய்ப்பரா னவரைக் கண்ட தகப்பனானவர், அந்த மேய்ப்பரானவர் தன்னுடைய மகனாகவனுடைய வாழ்க்கை யைக் குறித்த கரிசணையோடு வந் திருக்கின்றார் என்பதை மறந்து, தன் மகனானவனின் செய்கையை நியா யப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, மேய்ப்பரானவரை நோக்கி: கர்த்தர் மோவாப்பிய ஸ்திரியாகிய ரூத் என்பவளுக்கு இரட்சிப்பை கொடுத்தார். அவள் வழியாக இரட்சணியத்தை உண்டாக்கவில்லையா. அப்படியே, அந்நிய நுகத்திலிருக்கும் இந்தப் பெண்ணும் இரட்சிப்ப டைவாள் என்று கூறிக் கொண்டார். அந்த மேய்ப்பரானவர், வாழ்வில் ஏற்படும் சூழ்நிலையையும், சூழ்நிலைகளிலிருந்து தப்பித்தக் கொள் ளும் போக்கை உண்டுபண்ணும் வழிகாட்டும் தேவ வார்த்தையை கேட்பதற்கு முன்னதாகவே, சந்தர்ப்பத்திற்கு தப்பித்துக் கொள்ளும்படி தன் இருதயத்தை கடினப்படுத்தியிருக்கும் அந்த தகப்பனானவரின் நிலையை கண்டு பரிதாப்பட்டார். கர்த்தரிடத்திலே உண்மையாக இருங் கள், அவர் உங்களுக்கு இரக்கம் செய்வார் என்று அந்த தகப்பனானவ ரிடம் கூறினார். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட அருமையான விசுவாசிகளே, வாழ்வின் வழிகாட்டியாகிய தேவனுடைய வார்த்தை யானது, மனதில் தோன்றும் இச்சைகளை நியாயப்படுத்துவதற்கல்ல, மாறாக நித்திய ஜீவனுக்கென்று அருளப்பட்டிருக்கின்றது. அவைகளின் உண்மையான விளக்கங்களை அறியாமல், நாம் நம்முடைய தவறான வழிகளை நியாயப்படுத்துவதற்கு துணிகரம் கொள்வதற்கு நல்லதல்ல. அறிந்தோ அறியாமலோ, நம் வாழ்விலே பலதரப்பட்ட சூழ்நிலைகள் உண்டாகலாம். அந்த நேரங்களிலே, சத்தியத்தின் வழி நடந்திடும் நீதிமா னானவன், மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும், தேவனுடைய ஆலோ சனையை கேட்கும் போது, இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், கண்ணிகளுக்கு தப்பித்துக் கொள்ளும் போக்கை உண்டு பண்ணுவார். எனவே, குற்றங்களை மறைக்காமல், அறிக்கை செய்யுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, வாழ்வின் விளக்காக இருக்கும் உம்முடைய ஜீவ வார்த்தைகளை என் துர்க்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தாமல், மனத்தாழ்மையோடு உம்மிடத்தில் சேரும் உணர்வுள்ள இருயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 17:15