புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2024)

திருமணங்களை வாய்கச் செய்கின்றவர்

ஆதியாகமம் 24:7

அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.


ஆபிரகாம் முதிர்வயதானபோது, தன் ஊழியக்காரனாகிய எலியேசரை அழைத்து, தான் தற்போது குடியிருக்கும் கானானியரின் குமாரத்திகளிட த்தில் நீ என் குமாரனாகிய ஈசாக்கு பெண் கொள்ளாமல், தன் தேசத்தி ற்கு சென்று தன் இனத்தாரிடத்திற்குப் போய், ஈசாக்குக்கு பெண் கொள் ளும்படி வானத்திற்கும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக் கொடுக்கும்படிக்கு கேட்டுக் கொண்டான். அதன்படிக்கு அவனுடைய ஊழியக்காரனும் ஆணையிட்டுக் கொடுத்தான். ஆபிரகாம், தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய அந்த ஊழியக் காரனி டம் ஏன் அப்படியாக கேட்டுக் கொண்டான்? கானானியர் மத்தியிலே தன் குமாரனுக்கு ஏற்ற அழகான பெண்கள் இல்லை என்பதாலோ? புறஜாதியராகிய அவர்ளிடத்திலே குணசாலியான ஸ்திரிகள் எவரும் இல்லை என்பதாலோ? அல்லது அவ்விடத்திலே உள்ளவர்கள் தன் தராதரத்திற்கு ஏற்புடையவர்கள் அல்ல என்பதாலோ? இல்லை! அவர்கள் அழிவை நோக்கிச் சென்ற அன்றைய உலகத்தின் பார்வையிலே மிகவும் ஏற்புடையவர்களாக இருந்தார்கள். ஆபிரகாம் தன்னை அழைத்த தேவன் இன்னார் என்பதை அறிந்திருந்ததால், விசுவாசித்திலே நிலைத்திருந்தான். புறஜாதியாராகிய கானானியர், நாகரீகம் உடையவர்களும், பலத்தவர்களும், அந்நிய தேவர்களை வழிபடுபவர்களும், பலவி தமான அருவருப்பான பாவங்களுக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்களுமாக இருந்து வந்தார்கள். ஆனால் ஆபிரகாமோ, 'என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டு வரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார் என்று தன் வீட்டின் விவகாரங்களிலே கர்த்தரையே நம்பியிருந்தான். பிரியமானவர்களே, இன்று சில விசுவாசிகள், தகுந்த பருவத்திலே எப்படியாவது பிள்ளைக்கு திருமணமாகிவிட்டால் போதும் என்ற மனநிலையுடையவர்களாக வாழ்கின்றார்கள். ஆனால் தங்கள் உள்ளத்திலே உண்மையாக கர்த்தரை நம்பி காத்திருக்கின்றவர்களுக்கோ கர்த்தர் சகாயராக இருந்து அவர்கள் காரியங்களை வாய்க்கச் செய்வார்.

ஜெபம்:

குறித்த காலத்திலே காரியங்களை வாய்க்கச் செய்யும் தேவனே, இந்த உலகத்தின் போக்கிலே சரியானவற்றை செய்யத் துணியாமல், உம்முடைய வார்த்தையை நம்பி உமக்கு காத்திருக்கின்றவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 18:22