புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2024)

ஆலோசனை தரும் தேவன்

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.


'நான் நீதிமான் எனவே நான் விரும்பிய எந்த இடங்களுக்கு சென் றாலும், நான் என் கர்த்தரிலே நம்பிக்கையாயிருப்பேன் அவர் என்னோ டிருப்பார்' என்று ஒரு விசுவாசியானவன், தன்னுடைய விருப்பப்படி தான் வசிக்கும் இடத்தையும், வீட்டையும் தெரிந்து கொண்டான். அந்த விசவா சியானவன் கூறிய வார்த்தைகளில் உண்மை உண்டு. அதாவது, நாம் எங்கு சென்றாலும், வாழ்வின் வழிகாட்டியாகிய நம் தேவனாகிய கர்த் தரை சார்ந்து வாழ்வதையே நம் இலக்காக கொண்டிருக்க வேண் டும். ஆனால், நான் விருப்பிய இட த்திற்கு செல்வேன், என்று ஒரு விசுவாசியானவன் கூறுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லோத்து நீதிமானாக இருந்தான். ஆனால், பாவமும் பாலியல் சம்மந்தமான சீர்கேடும், அக்கிரமமும் நிறைந்த இடத்தை தன் வசிக்கும் இடமாகக் கொண்டான். ஆபத்துக் காலத்திலே தேவன் அவனைத் தப்புவித்தார். ஆனால், தன் தெரிந்து கொள்ளுதலினாலே உண்டான பின்விளைவுகளை வாழ்க்கையிலே எதிர்நோக்க வேண்டியி ருந்தது. தன் மந்தைகள் பெருக்கத்தினால், தான் இருக்க வேண்டிய செழிப்பான இடத்தை தெரிந்து கொண்ட அவன், முடிவிலே, அவனுக்கு அவனுடைய இரண்டு குமாரத்திகள் மட்டுமே மிகுதியாய் இருந்தார்கள். அவர்கள், வளர்ந்து வந்த இடத்திலே இருந்த பாவமானது அவர்களை பின்தொடர்ந்தது. எனவே, பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வதற்கென்று ஒரு இடத்தையும், வீட்டையும் தெரிந்து கொள்ள முன்பதாக, பூமியைiயும் அதிலுள்ளவைகளையும் படைத்தவரையும், உலகத்தின் வஞ்சகமான தத்துவங்களையும், கால ங்களையும், நம்முடைய நாட்களையும் அறிந்த தேவாதி தேவனி டத்திலே ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடம், பிள்ளைகளின் கல்வி, சொந்த பந்தங்கள், நண்பர்கள், போக்குவ ரத்திற்கான வசதி, தற்போதைய நிர்வாக நிலைமை, நல்ல முதலீடுகள் போன்ற காரணிகளை மட்டும் வைத்து உங்கள் வதிவிடங்களை நிர்ணயிக்காமல், நம்மேல் கண் வைத்து ஆலோசனை தரும் சிறந்த வழிகாட்டியாகிய தேவாதி தேவனை நோக்கி, அவருடைய வழிடநத்துத லுக்காக காத்திருங்கள். நம்முடைய தேவைகளை அறிந்த அவர், ஏற்ற காலங்களிலே அவைகளை வாய்க்கச் செய்வார்.

ஜெபம்:

என் மறைவிடமான தேவனே, நான் இருக்க வேண்டிய இடத்தையும், நடக்க்க வேண்டிய வழிகளையும் நீர் எனக்கு காண்பித்து, அந்த வழியிலே நான் நடக்கும்படிக்கு என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 132:13