தியானம் (மார்கழி 03, 2024)
குடியிருப்பு
சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
ஆபிரகாம், லோத்து என்னும் இரண்டு உறவினர்கள் ஓரிடத்திலே ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரின் பொளாதாரம் விருத்தியடைந்து, சொத்துக்கள் பெருகிய போது, வயதில் முதிர்ந்தவனாகிய ஆபிரகாம் லோத்துவை நோக்கி: நாங்கள் இருக்கும் இடமானது, இருவருக்கும் போதாதபடிக்கு எங்கள் சொத்துக்கள் விருத்தியடைந்திருக்கி ன்றது. எனவே, நீ எந்தப் பக்கமாக போகப் போகின்றாய் என்று தீர்மானம் செய்து கொள். பின்னர் நான் என்னுடைய இடத்தை தெரிந்து கொள் கின்றேன் என்று, கூறினான். இப்ப டியாக தன் இருப்பிடத்தை தெரிந்து கொள்வதற்கு லோத்து முன்னுரிமையைப் பெற்றுக் கொண்டான். அதன்படிக்கு, தன்னிடமிருக்கும் சொத்துக்களுக்கும், தனக்கும் ஏற்றபடி நீர்வளம் பொருந்திய ஒரு செழிப்பான இடத்தை தெரிந்து கொண்டான். ஆனால், ஆபிரகாமோ, தன்னை அழைத்த தேவனாகிய கர்த்தரை மட் டுமே நம்பியிருந்தான். தன்னை அழைத்த அவருடைய வார்த்தையிலே நிலைத்திருந்தான்;. ஆண்டுகள் கடந்து சென்றதும், லோத்து தன் குடியிருப்புக்கு என்று தெரிந்த பட்டணமானது, பாவத்தினாலும் அக்கிரமத்தி னாலும் நிறைந்திருந்ததால், வானத்திலிருந்து வந்த அக்கினியால் முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்திலே வசித்து வந்த, அவனுடைய இர ண்டு குமாரத்திகளுக்கு நியமிக்கப்பட்டிருந்து இரண்டு மருமக்களும் வழிகாட்டியாகிய, கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தையை குறித்து நகைத்தார்கள். அவனுடைய மனைவி கர்த்தர் கூறிய வார்த்தையை அசட்டை செய்து உப்புத்தூணாக மாறிப்போனாள். லோத்தும் அவனுடைய குமாரத்திகள் இருவரும், ஜனங்கள் இல்லாத மலையிலே வாசம் பண்ணினார்கள். அவனுடைய குமாரத்திகள் அருவருப்பான காரியங்களை நடத்தினார்கள். ஆனால், ஆபிரகாமோ, தன் முதிர் வயதிலும், தன் தேவனாகிய கர்த்தரையே தன் வாழ்வின் வழிகாட்டியாக வைத்திருந்தான். அவருடைய வார்த்தையின்படி தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு அவன் தாமதிக்கவில்லை. கர்த்தருடைய வார்த்தையின்படி தன் குடியிருப்பை தெரிந்து கொண்டான். கர்த்தரே அவனுடைய மகா பெரிய பலனாயிருந்தார். பிரியமானவர்களே, நாம் வசிக்கும் இடத்தை தெரிந்து கொள்வதிலிருந்து நம் வாழ்வில் எல்லா பகுதிகளில் கர்த்தரையே நாம் நம் வாழ்வின் வழிகாட்டியாக கொண்டால், அவரே நம் முடைய அடைக்கமும், கேடகமும் கோட்டையுமாக இருப்பார்.
ஜெபம்:
பரலோக ஆசீர்வாதங்களை தரும் தேவனே, நான் இந்த உலகத்தின் செழிப்பைக் கண்டு, அந்த வழியிலே என் வாழ்க்கையை இட்டுச் செல்லாமல், உம் வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஆதியாகமம் 2:15