தியானம் (மார்கழி 02, 2024)
உத்தம மார்க்கத்தார்
சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்
'அன்றிருந்த உலகம் வேறு, இன்றிருக்கும் உலகம் வேறு. இது புது யுகம். நீங்கள் கற்றுக் கொண்டவைகள் இந்த நவீன உலகத்திலே செல் லுபடியாகாது' என்று கூறி அன்றிருந்த பாடங்களின் வழிகாட்டி நூல் களை, நாட்டின் நூல்நிலையத்தின் சரித்திரங்கள் என்ற பகுதியிலே காட் சிப் பொருளைப் போல நேர்த்தி யாக அடுக்கி வைத்திருந்தார்கள். இவ்வண்ணமாகவே, நாகரீகம் என்ற போர்வையின் கீழ் வாழும் சில மனி தர்கள், கர்த்தர் விளம்பிய சத்திய வேதத்தையும் குறித்து, தவறாக எண்ணங் கொண்டு, உலக த் தத்துவங்களால் தங்கள் சிந்தைகளை நிரப்பிக் கொண்டு, தங்களுக்குத் தாங்க ளே கேடுண்டாக்கும்படிக்கு, வாழ்வு தரும் சத்திய வேதத்தை தங்கள் வாழ்க்கையைவிட்டு விலக்கி, மற்றவர்களும் அதை பின்பற்றாதபடிக்கு பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஒரு மனிதனானவன், தன் அறிவுக்கு எட்டியபடி, தான் தங்கும் வீட்டை கட்டிக் கொள்ளலாம். தன் விருப்ப ப்படி சரீத்தை மூட உடைகளை உடுத்திக் கொள்ளலாம். தன் வாய்க்கு ருசியான பிரகாரமாக விதவிதமாக சமைத்து உணவுகளை உண்டு கொள் ளலாம். விஞ்ஞானம், தொழில்நுட்பம், செயற்கையான நுண்ணறிவு (Artificial Intelligence) என்று பல துறைகளிலே பாண்டித்தியம் பெறலாம். இப்படியாக புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும் என்றும் தங்கள் நவீனமான வழிகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால், உலகங்கள் மாறிப்போனாலும், புது யுகங்கள் ஒன்றின்பின் ஒன்றாக பல வர்ணங்களிலே வந்தாலும், மனிதனுக்குள் இருக்கும் ஆத்துமாவை இரட்சிக்க யாரால் கூடும்? எந்த மனித அறிவினாலோ, முயற்சியினாலோ ஆத்தும இரட்சிப்பு உண் டாவதில்லை. மனிதர்களுக்கு செம்மையாக தோன்றுகின்ற வழிகளின் முடிவானது மரணமாகவே இருக்கும். எக்காலமும், எல்லா பருவத்திலும், எந்த சூழ்நிலையிலும், கர்த்தருடைய வார்த்தை மாறிப் போவதில்லை. அதை ஒருவன் தன் வாழ்வில் புறக்கணிக்கலாம், ஆனால் அதை ஒருவனும் மாற்றிப் போடக்கூடாது. அந்த ஜீவ வார்த்தைகள் எந்த யுகத்தி லும், அதை சார்ந்து வாழ்பவர்களுக்கு சமாதானமான வாழ்க்கையையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் கொடுக்கின்றது. (யோவான் 6:68) எனவே நாம் எந்த யுகத்திலே வாழ்பவர்களாக இருந்தாலும், அந்த யுகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், எப்போதும் கர்த்தருக்கு பயந்து, அவர் வழியிலே நடக்கின்ற உண்மையுள்ள உத்தம மார்க்கத்தாராய் காணப்படுவோமாக.
ஜெபம்:
காலத்தை கடந்த தேவனாகிய கர்த்தாவே, காலங்கள் மாறினாலும், மனிதர்கள் மாறினாலும், என் வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய வார்த்தையில் நிலைத்திருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 6:68