புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2024)

வாழ்வின் வழிகாட்டி

யோவான் 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;


ஒரு ஊருக்கு புதிதாக வந்த மனிதனொருவன், அந்த ஊரைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, சுற்றுலா திணைக்களத்தினால் வெளியிடப் பட்ட வரைபடம் கொண்ட வழிகாட்டியொன்றை வாங்கிக் கொண்டான். அது மட்டுமல்லாமல், அந்த ஊரை தனக்கு சுற்றிப் காண்பிப்பதற்காக, அந்த ஊரைப்பற்றி நன்கு அறிந்த வழிகாட்டியொருவனை (Guide) தன் வாகனத்தின் சாரதியாக்கிக் கொண்டான். அதுபோலவே, இந்த உலகி லே வாழ்வதற்கு மனிதர்கள் யாவ ரும், சுகாதாரம், ஆரோக்கியம், வாழ் க்கைதரம், பாடசாலைகள், வேலை கள், உல்லாசப் பயணம் என்று பலவிதமான வழிகாட்டிகளிலே தங்கி வாழ்கின்றார்கள். மனிதர்களால் மனிதர்களுக்கு உருவாக்கப்ப ட்ட அந்த வழிகாட்டிகளால் சில பிரயோனங்கள் உண்டு ஆனால் அவ ற்றை பின்பற்றுகின்றவர்கள் எவரும் மனித வாழ்க்கையின் முதன்மை யான நோக்கத்தை அறிந்து கொள்ளவோ அடைந்து கொள்ளவோ முடியாது. சத்திய வேதமே நம் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கின்றது. அந்த ஜீவ வார்த்தையை பின்பற்றி நடக்கின்றவர்கள் வாழ்வின் நோக்கத்தையும், அதன் இலக்கையும் அடைந்து கொள்கின்றார்கள். வாழ்வின் வழிகாட்டியாகிய அந்த வார்த்தையானது, மனிதகுலத்தை அழிப்பதற்காக அல்ல, மாறாக நித்தியமான அழிவிலிருந்து அவர்களை காத்துக் கொள்ளும்படியாகவே வெளிப்பட்டது. ஆதிமுதலாய் என்றென்றும் இருந்த அந்த வார்த்தையானது மாம்சமாகி, மனுவுருவாக, கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையை கண்டவர்கள், அது பிதாவாகிய தேவனுக்கு, ஒரே பேறானவருடைய மகிமைகக்கு ஏற்ற மகிiயாக இருந்தது என்று சாட்சி கொடுத்தார்கள். அவரே மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கும் மெசியாவாகிய இயேசு. வாழ்வின் வழிகாட்டியாகிய அவர் வெளிப்பட்டதை நினைவுகூரும்படி இந்த மாதத்திலே ஒரு நாளை நியமித்திருக்கின்றோம். பிதாவாகிய தேவ னானவர், முன்னுரைத்த இரட்சண்யத்தை நிறைவேற்றி முடித்ததை அறிக்கை செய்வதே அந்த நினைவு கூருதலின் மேன்மையாக இருக்கின்றது. முன்னுரைத்தவைகளை செய்து முடிப்பவர், தான் மறு படியும் வருவேன் என்று உரைத்திருக்கின்றார். எனவே அந்தத் திரு நாளை நம்பிக்கையோடு எதிர்பாத்திருக்கும் நாம், வாழ்வின் வழி காட் டியாகிய ஆண்டவராகிய இயேசு காட்டிய வழியிலே வாழ்வோமாக.

ஜெபம்:

வாக்குரைத்தவைகளை நிறைவேற்றும் தேவனே, நீர் வாக்கிலே உண்மையுள்ளவர் என்பதை நான் உணர்ந்தவனாய், உம்முடைய வார்த்தையை பற்றிக் கொண்டு வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105