தியானம் (கார்த்திகை 27, 2024)
துன்பங்களிலே சோர்ந்து போய்விடாதிருங்கள்
மத்தேயு 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
'அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' (2 தீமோ 3:12). 'தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாட நுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.' (1 பேதுரு 3:17) என்ற சத்தியத்தை விசவாசமார்க்கத்தார் யாவரும் நன்கு அறிந்திருக்கின்றார்கள். இந்த துன் பமும், உபத்திரவங்களும், பாடுகளும் எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து விசுவாசிகளுக்கு உண்டா கலாம்? உலகத்தாரிடத்தில் மாத்தி ரம் இருந்தா? அவிசுவாசிகளிடம் மாத்திரமா அல்லது விசுவாசிகளிடமி ருந்தும் உண்டாகலாமா? சபை விசு வாசிகளிடம் மாத்திரம் இருந்தா அல்லது சொந்த குடும்பத்தாரிட மிருந் தும் உண்டாகலாமா? கணவனிடமிருந்து மனைவிக்கும், மனைவியிடமிருந்து கவணனுக்கும் உண்டாகலாமா? பிள்ளைகளிடமிருந்து பெற்றோரு க்கும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் உண்டாகலாமா? ஒரு விசு வாசியானவனுக்கு துன்பங்கள், உபத்திரவங்கள், பாடுகள் எங்கிருந்தும், எவரிடமிருந்தும் உண்டாகலாம். அப்படியானால், ஏன் சில விசுவாசிகள், தங்கள் பெற்றோரை கவனியாமல் தள்ளிவிடுகின்றார்கள்? அந்திய கால த்திலே பெற்றோர் சம்பூரணராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? ஏன் அவர்கள் நிமித்தம் பாடுகளையும் உபத்திரவங்களையும் சகித்துக் கொள்ள கூடாமல் இருக்கின்றார்கள்? விசுவாசிகள், பாவம் நிறைந்த உலகத்திலே, அதிக நேரத்தை பாடசாலையிலும், வேலை செய்யும் இடங்களிலும், வெளி இடங்களிலும் செலவு செய்கின்றார்கள். பாவமும் அநீதியும் அங்கே நடந்தாலும் அவற்றி ற்கு உடன்படாமல், அவற்றை சகித்துக் கொண்டு, நீதியை நடப்பித்து, தாங்கள் அந்த இடத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றித் திரும்புகின்றார்கள். ஒருவேளை பெற்றோர் அவிசுவாசிகளாக இருந்தாலும், அவர்களை கிறிஸ்துவினிமித்தம் ஏன் சகித்துக் கொள்ள கூடாதிருக்கின்றார்கள்? அந் நாட்களிலே, 'எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக் கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற் போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று' தறவான உபதேசத்தைப் போதித்து வந்தார்கள். இப்படி ப்பட்டவர்கள் விசுவாசிகள் அல்ல என்று வேதம் கூறுகின்றது. நாமோ விசுவாசத்திலே நிலைத்திருப்போமாக.
ஜெபம்:
உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு என்று கூறிய தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய வார்த்தையின்படி என் வாழ்வைக் காத்துக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 19:26