தியானம் (கார்த்திகை 25, 2024)
தேவ சித்தத்தை நிறைவேற்றுங்கள்
1 தெச 5:21
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாக வாழ்ந்து வந்த நாம், நம் சரீரங்களை ஒடுக்குவதால் நீதிமான்களாக ஆகிவிடலாம் என்ற கொள்கையுடையவர்களாக வாழ்ந்து வந்தோம். மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன், ஒருநாள் உணவு உண்ணாமல் இருந்தவனை விட மேலானவன் என்று எண்ணியிருந்த நாட்கள் உண்டு. சிலர் விவா கம் பண்ணாமல், இல்லற வாழ்க் கையை தவிர்த்துக் கொள்வதாலும், சில போஜனபதார்த்தங்களை வில க்கிக் கொள்வதாலும், மேன்மை நிலையை அடையலாம் என்று எண்ணிக் கொண்டார்கள். பலவிதமான மத நம் பிக்கையுடையவர்களும் இவைகளை அதிகமாக செய்கின்றவன், நீதிமான் எனப்படுவான் என்று அவைகளை ஒழுங்காகவும் கிரமமாகவும் செய்து வந்தார்கள். ஆனால் அவையொன்றும் மனித குலத்தின் பாவ தோஷத்தை நீக்கி, ஆன்மீக இரட்சிப்பை வழங்கக்கூடாதிருந்து. 'எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவ ருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.' (ரோமர் 3:23-24) கிருபையினாலே விசு வாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர் 2:8-9). அப்படியாக இரட்சிப்பை பெற்ற பின்னர்;, விசுவாசிகளில் சிலர், தேவனுக்கு முன்பாக அதி உத்தமர்களாக தங்களை காண்பிக்கும் பொருட்டு, தாங்கள் தங்கள் பழைய கிரியைகளை மறுபடியும் செய்வற்கு தங்களை ஒப்புக் கொடுத்து, அதுமட்டுமல்லாமல், அவைகளை உபதேசங்களாக்கி மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள், தங்கள் கிரியைகளை திணிக்கின்றார்கள். விவாகம் பண்ணாமல் தனித்திருக்க வரம் பெற்றவர்கள் இருக்கின்றார்கள். தனித்திருந்து ஊழியம் செய்யும்படி ஒருசிலர் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சிலர் தங்கள் சரீரத்தில் ஏற்பட்ட நோய்களின் நிமித்தம், மருத்துவ ஆலோசனையின்படி சில உணவு வகைகளை தவிர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால், இவைகளை உபதேசங்களாக்கி, விசுசவாச மார்க்கத்தாரை குழப்புகின்றவர்கள் விசுவாசத்தைவிட்டு வழுவிப்போன மனசாட்சியிலே சூடுண்ட பொய்யர்கள் என்று வேதத்திலே காண்கின்றோம். இப்படிப்பட்ட உபதே சங்களை பின் பற்றி விசுவாசத்தினின்று வழுவிப்போகாதபடிக்கும், மறுபடியும் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், மனம் மறுரூபமாகும்படிக்கு மேலானவைகளை நாடித் தேடுங்கள்.
ஜெபம்:
என்னை இரட்சித்த தேவனே, நான் மறுபடியும் என் பழைய கிரியைகளுக்கு திரும்பாமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, நீர் சொல்லும் கிரியைகளை நிறைவேற்றி முடிக்கும்படி என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - தீத்து 3:5-7