புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2024)

சிந்தனை, சொல், செயல்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


தியானங்கள், வேதப்படிப்புக்கள், தேவ செய்திகள், தீர்க்கதரிசனங்களை கேட்கும் போது, மனம் தளர்ந்து போய்விடாதிருங்கள். தேவ கிருபை என்றுமுள்ளது. சகல சத்தியத்திலும் உங்கைள வழிநடத்தும் சத்திய ஆவியானவர் உங்களோடிருக்கின்றார் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். பாவத்திற்கு தன் காலை விலக்கிக் கொள்கின்றவன், தேவன் கொடுத்த நல் மனச்சாட்சியை உணர்வுள்ளதாக காத்துக் கொள்கின் றான். பாவத்திற்கு தன்னை பழக் கிக் கொள்கின்றவன், தன் மனச் சாட்சியை உணர்வற்றுப் போகப் பண்ணுகின்றான். அதன் பின்னர், பாவம் தன்னை மேற்கொள்ளாது என்றும் கூறிக் கொள்வான். எனவே, நாம் எதை நாளாந்தாம் சிந்திக்கின்றோம், கேட்கின்றோம், பேசுகி ன்றோம், பார்க்கின்றோம், உடுத்துகின்றோம், செல்கின்றோம், செய்கி ன்றோம் என்பதைக் குறித்து கவனமு ள்ளவர்களாக இருக்க வேண்டும். மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யர்களை பின்பற்றாதபடிக்கும், நம் மனசாட்சியானது சூடுண்டு போகாதபடிக்கும், தேவ வார்த்தைகளின் வெளி ச்சத்திலே உணர்வுள்ள ஜீவியம் ஜீவிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நெறியற்ற திரை ப்படங்களை பார்த்து பழகிக்கொள்கின்றவன் அல்லது ஊரையும் உலகையும் பார்க்க சுற்றுலா சென்று, உலகத்தார் பெரும்பான்மையாக களியாட்டங்களுக்காக சேர்ந்து கொள்ளும் இடங்களுக்கு தன் சொந்த தீர்மானத்தின்படி போக்கும் வரத்துமாக இருக்கும் விசுவாசியானவன், நாட்கள் கடந்து சென்றதும், அவன் உலக போக்கிற்கு தன்னைப் பழக்கிக் கொண்டதால், அவன் செல்லும் சபையிலே பரிசுத்தமாக வாழ்கின்றவர்களை பார்த்து, இவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள், நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகின்றவர்கள் என்று சொல்லிக் கொள்வான். நம்முடைய இருதயமானது, தேவனுடைய வார்த்தை விழுந்து முளைக்கும் பண்பட்ட நிலமாக எப்போதும் காணப்பட வேண்டும். ஒரு விசுவாசியின் இருதயமானது, மனிதர்கள் போக்கும் வரத்துமாக மிதித்துப் போடுகின்ற நிலமாகவோ, உணர்வற்றுப் போன கடினமாக கற்பாறையைப் போன்ற நிலமாகவோ, முட்செடிப் புதர்கள் நிறைந்த தாகவோ இருந்தால், அங்கே தேவனுடைய வார்த்தையின் பலன் உண்டாகாது. எனவே, எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் சுத்த மனசாட்சியிலே ஒலிக்கும் தேவ சத்தத்தை அற்பமாக எண்ணி அசட்டை செய்து விடாதீர்கள். இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

ஒவ்வொரு நாளும் புதிய கிருபையை எனக்கு தருக்கின்ற தேவனே, உம்முடைய சத்தத்தைக் கேட்டு, அதன்படி என் வாழக்கையை நான் வாழும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8