புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2024)

யாருக்காக வாழ்கின்றீர்கள்?

சங்கீதம் 128:4

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.


சபையின் ஆராதனைகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்க தவறிய ஒரு விசு வாசியானவனை, அவனுடைய மேய்ப்பரானவர் சந்தித்து, அவனோடு பேசினார். தம்பி, ஆராதனைகள் இல்லாமல், நித்திரையில்லாமல், இப்ப டியாக உன் வாழ்க்கையை நீ வாழ்வது நல்லதல்ல, உன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளு என்று கூறினார். அதற்கு அவன் மேய்ப் பரானவரை நோக்கி: 'ஐயா, நான் யாருக்காக வாழ்கின்றேன்? யாரு க்காக பிரயாசப்படுகின்றேன்? என் பிள்ளைகளுக்காகத் தானே வாழ் கின்றேன். அவர்கள் கல்வி கற்க வேண்டும். அவர்கள் பட்டம் பெற வேண்டும். அவர்கள் விளையாட்டு துறையிலும், இசை மீட்டுவதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றே இராப்பகலாக உழைக்கின்றேன் என்று கூறிக் கொண்டான். அதற்கு மேய்ப்பரானவர்: தம்பி, அது விசுவாசத்தின் அறிக்கையல்ல. நீ உண்மையாகவே உன் மனைவி, பிள்ளைகளை நேசி க்க வேண்டுமென்றால், நீ ஆண்டவர் இயேசுவுக்காக வாழ வேண்டும். பிதாவாகிய தேவனின் சித்தம் உன்னில் நிறைவேற இடங் கொடு. அப்போது உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற் றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். உன் சந்ததி பாக்கி யம் பெற்ற சந்ததியாக இருக்கும் என்றார். இப்படியாக, விசுவாசமார் க்கத்தாரில் சிலர், கணவனானவன், தான் மனைவிக்காக வாழ்கின்றேன் என்றும், மனைவி கணவனுக்காக வாழ்கின்றேன் என்றும் உணர்ச்சி பூர்வமாக கூறுவதை கேட்டிருப்பீர்கள். அப்படியாக அறிக்கை செய்து வருவதால், பிள்ளைகளைக் குறித்து அல்லது குடும்பத்தைக் குறித்து யாராவது ஒரு குறையை கூறிவிட்டால், அவர்கள் தங்கள் விசுவாச வாழ்க்கையை முற்றாக மறந்து போய்விடுகின்றார்கள். நாம் பிள்ளை களை நடக்க வேண்டிய வழியிலே நடாத்த வேண்டும். கணவனும் மனை வியும், வேதம் கூறும்படி கணவனும் மனைவியுமாக வாழ வேண்டும். பிரியமான விசுவாசியே, நீ திராட்சை செடியாக ஆண்டவர் இயேசுவில் ஒட்டப்பட்ட கொடியாக இரு. அதையே ஒரு கணவன் தன் மனைவிக் கும், மனைவி தன் கணவனுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தப் பிரகாரமாக தங்கள் பிள்ளைகளையும் மெய்யான திராட்சை செடியாகிய இயேசுவில் இணைந்திருக்கும் கொடியாக வளர்க்க வேண்டும். அப்ப டியாக இருக்கும் குடும்பமானது எக்காலத்திலும், தளர்ந்து போகாமல், விசுவாசத்திலே நிலைத்திருக்கும் குடும்பமாக இருக்கும்.

ஜெபம்:

உம்முடைய ராஜ்யத்தில் பங்கடையும்படி என்னை அழைத்த தேவனே, குடும்பத்தின் சித்தத்தையல்ல பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே என் வாழ்வில் நிறைவேற்றுபவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:31