புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2024)

'அனுதின தியானம்'

சங்கீதம் 119:165

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.


விசுவாச மார்க்கத்தார் விசுவாசித்தினின்று விலகிப் போகக்கூடிய வழி களை குறித்த நாம் தியானித்து வருகின்றோம். 'இது எங்களுக்கு தெரி யும், பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றோம். எனவே, விசுவாசத்தை விட்டு வழுவிப்போவதற்கேதுவாக தற்போது என்னிடம் இருக்கின்ற பிர ச்சனைகளை பராமுகமாக விட்டு விட்டு, அடுத்த பாடத்திற்கு கடந்து செல்வோம். அநேக செயற்திட்டங் களை செய்ய வேண்டும். தேவனு க்காக ஏதவாது செய்ய வேண்டும். வேதத்தை ஆழமாக கற்றுக் கொ ள்ள வேண்டும்' என்று ஒரு விசுவா சியானவன் எண்ணுவானாக யிரு ந்தால், அவன் தனது கிரியைகளால் மனிதர்களுக்கு முன்பாக தன்னை நீதிமானாக காண்பிக்கின்றவாக இருப்பானேயல்லாமல், தேவனுக்கு பிரி யமுள்ளவாக இருக்கமாட்டான். எனவே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வரும்போது, விசுவாசத்திலே நிலைத்திருக்கின்ற வர்களாக காணும்பொருட்டு, மிகுந்த ஜாக்கிரதையுள்ளவர்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும். அதாவது, பயந்து, திகில் கொண்டு, கர்த் தரை சேவிப்பது என்பது பொருளல்ல. விசுவாசத்தைவிட்டு நம்மை விலகிப் போகச் செய்யும், பிசாசானவனின் வஞ்சகங்களை நாம் இனங் கண்டு, அவைகளை இயேசுவின் நாமத்திலே மேற்கொள்ளுகின்றவ ர்களாக அனுதினமும் வாழ வேண்டும். நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான யாவற்றையும் ஆண்டவராகிய இயேசு நமக்கு கற்பித்து காண்பித்திருக்கின்றார். நீங்கள் அனுதினமும், ஒரு குறித்த நேரத்திலே, தேவனுடைய பாதத்திலே அமர்ந்து வேதத்தை வாசித்து, தியானிக்கின்றீர்களா? நாம் யாவரும் சபைக்கு சென்று கூடி ஜெபித்து, துதித்து, வேத வார்த்தைகளை கேட்கின்றோம். சிலர் குடும் பமாக சேர்ந்து, வேதத்தை தியானித்து, ஜெபிக்கின்றார்கள். அவைகள் யாவும், நன்மையானதும், அவசியமானதுமானதுமாக இருக்கின்றதால், அவைகளை தொடர்ந்து செய்யுங்கள். ஆனால், நீங்கள், தனியாக, தேவ னுடைய பாதத்திலே அமர்ந்து, வேதத்தை தியானித்து, ஒரு பிள்ளை யானவன் தன் தகப்பனானவரோடு எப்படி பேசுகின்றானோ, அதைப் போல தேவனோடு பேசவேண்டும். உங்கள் வாழ்க்கையில் நடந்த மற்றும் நடக்கின்ற சம்பவங்களை வேத வார்த்தையின் வெளிச்த்சதிலே தியானிக்க வேண்டும். அதை கருத்தோடு செய்து வருகின்றவர்கள் இடறிவிழுவதில்லை. விசுவாசத்தைவிட்டு வழுவிப் போவதில்லை. அவர்கள் வாழ்வில் தேவ சமாதானம் நிலைத்திருக்கும்.

ஜெபம்:

ஜீவன் தரும் வார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, நீர் என்னுடைய வாழ்க்கையைக் குறித்து என்னோடு பேசும்போது, நான் அதை பாராமுகமாக விட்டுவிடாதபடிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1