தியானம் (கார்த்திகை 17, 2024)
வழுவிப்போக வைக்கும் ஐக்கியங்கள்
சங்கீதம் 139:24
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண் டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
ஒரு பெற்றோரானவர் தாம் அன்பு காட்டி அரவணைத்து வளர்த்து வந்த தங்களுடைய மகனானவன், பொதுவான எல்லா விஷயங்களிலும் மிக வும் ஒழுக்கமுள்ளவனாக இருந்து வந்ததினால் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனாலும், வாலிப வயது வந்ததும், அவனுடைய நண்பர்களில் சிலரின் போக்கை அறிந்து கொண்ட பெற்றோரானவர், தங்கள் மகனானவனு டைய வாழ்க்கையை குறித்து மிகவும் கரிசனையுள்ளவர்களானார்கள். கல்வி, வேலை, ஒழுக்கம் மற்றும் பெரியோரை கனம் பண்ணு தல், மதுபான குடிவெறி இவையொன்றும் அவன் வாழ்க்கையிலே இல்லாதிருந்தபோதும், ஏன் அவர்கள் அந்த ஒரு காரியத்தைக் குறித்து மிகவும் கரிசனையுள்ளவர்களானார்கள்? தாமதமின்றி அவர்கள் தங்கள் மகனான வனை அழைத்து, அன்போடு அவனுக்கு அறிவுரை கூறினார்கள். அவனோ, அவர்களை நோக்கி: இப்போது எனக்கு இருபத்தைந்து வயதாகிவிட்டது. எல்லா காரியங்களிலும் நான் உங்களின் சொற்படியே நடந்து வருகின்றேன். நண்பர்கள் என்னுடைய தனிப்பட்ட விஷயம், அதிலே தலையிட வேண்டாம் என்று கூறினான். அதை கேட்ட பெற்றோரானவர்கள் மனவேதனை அடைந்தார்கள். இத்தனையாண்டுகளாக நெறிமுறையுடன் வாழ்ந்து வந்த தங்கள் மகனானவன், தவறான நண்பர்களால் வழிவிலகிச் சென்று, வாழ்க்கையிலே பின்னடைவுகளையும், ஒருவேளை திரும்ப முடியாத குற்றங்களுக்கு ஆளாகிவிடுவானோ என்ற மனப்போராட்டங்களுக்குமுள்ளானார்கள். இவ் வண்ணமாகவே, நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற விசுவாசிகளும், பொதுவாக எல்லா பாரங்களையும் இறக்கி வைத்து, பாவத்திற்கு வழி வகுக்கும் பாதைகளை விட்டுவிடுகின்றார்கள். ஆனால், பழைய வாழ்க்கையின் ஞாபகத்திற்காக, உலக வாழ்க்கையோடு ஐக்கியமாக இருக்கும்படிக்கு ஒரு சிறிய ஒற்றயடி பாதையை மனதிலே வைத்துக் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். அதைக் குறித்து யாராவது ஆலோச னைகள் கூறினால், அது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, அதிலே தலை யிவதற்கு சபைக்கோ சங்கத்திற்கோ அனுமதியில்லை என்று கூறிக் கொள்வார்கள். இப்படியாக சில விசுவாசமார்க்கத்தார், உலகத்தின் நட்புக்களால், தாங்கள் உறுதியாய் பற்றிக் கொண்ட விசுவாசத்தைவிட்டு வழு விப்போய், தங்களுக்கும், தங்கள் குடும்பதிற்கும், சரீரமாகிய சபைக்கும் வேதனைகளையும், நோவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.
ஜெபம்:
என் உள்ளந்தரியங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நான் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டான நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்த்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 1:22