தியானம் (கார்த்திகை 16, 2024)
சிந்தையை வார்த்தையினால் நிரப்புங்கள்
எபேசியர் 5:19
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு,
ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று கேட் டார்கள். அதற்கு அவர் மறுமொழியாக: 'யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படு வீர்கள்; கலங்காதபடி எச்சரிக் கையாயிருங்கள்; என்றும் அது முடிவு அல்ல, இவைகளெல் லாம் வேதனைகளுக்கு ஆரம் பம் என்று இறுதி நாட்களின் சில அடையாளங்களைக் குறி த்து கூறினார். அவர் தம்முடைய திருப்பணியை இந்த பூமியிலே நிறை வேற்றி, மனித குலத்தின் பாவங்களை தன்மேல் ஏற்றுக் கொண்டு, அதை பரிகரித்து, மரித்து, மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்ந்தெழுந்து, பரலோகத்திற்கு சென்ற பின்னர், தம்முடைய சீஷனா கிய யோவானுக்கு இனி சம்பவிக்க போகின்றவைகளை குறித்து வெளி ப்படுத்தினார். இந்த நாட்களிலே விசுவாசிகள், யுத்தங்களையும் யுத்த ங்களின் செய்திகளையும் கேள்விப்படுவது மட்டுமல்ல, வேதத்தை வாசி த்து, தியானித்து, ஜெபித்து, தாங்கள் செய்ய வேண்டிய நாளாந்த அலு வல்களை சீக்கிரமாக செய்து முடித்து. தங்கள் ஓய்வு நேரங்க ளிலே, அதிகதிகமாக உலகச் செய்திகளையும், அரசியல்களையும், நாட்டு நடப்புக்களையும், உலகம் போகும் போக்கையும் செய்திகள் ஊடகங்கள் வாயிலாக கேட்டு, தங்கள் சிந்தைகளை அவைகளிளாலே நிரப்பிக் கொண்டு, அவைகளையே சக விசுவாசிகளுடனும் கூட அதிகதி கமாக பேசிக் கொள்கின்றார்கள். செய்திகளை கேட்டு, உலகத்தின் போக்குகளை அறிந்து கொள்வது பாவமா என்று கேட்டு கலகங்களை ஏற்ப டுத்திக் கொள்ளாமலும், உங்கள் இருதயத்தையும் சிந்தைகளையும் அவைகளால் நிரப்பிக் கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவராக இருங்கள். பக்திவிருத்தியானது தேவ வார்த்தைகளால் உண்டாகின்றது. உலகத்திலுள்ளவைகளால் கவலைகளும், மயக்கங்களும், பயங்களுமே உண்டாகின்றது. பானையிலுள்ளதுதான் அகப்பையில் வரும் என்பது போல, ஒரு விசுவாசி தன் இருதயத்தை எவைகளால் நிரப்பி கொள்கின்றானோ, அவைகளையே அவன் வாயானது அறிக்கை செய்யும். எனவே, நீங்கள் விசுவாசத்திலே நிலைத்திருக்கும் பொருட்டு, தேவனுடைய வார்த்தைகளையே அதிகதிமாகத் தியானியுங்கள். அப்படி செய்வதினால் நீங்கள் ஞானமுள்ளவர்களாய் நடந்து கொள்வீர்கள்.
ஜெபம்:
சகலமும் அறிந்த தேவனே, நான் மதியற்றவனைப் போல இராமல், உம்முடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து, என் வாழ்நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 6:45