தியானம் (கார்த்திகை 15, 2024)
நம் இயேசு எக்காலமும் மாறாதவர்
சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.
இந்த உலகிலே வாழும் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையிலே வெவ்வேறான காலங்களையும் பருவங்களையும் கடந்து செல்கின்றார்கள்;. கண்ணீரோடு விதைக்கின்ற காலமுண்டு. கெம்பீரத்தோடு அறுகின்ற கால முண்டு. குழந்தை பிறக்கும் நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகி ன்றோம். அன்புள்ளவர்கள் மரிக்கும் போது துக்க நாட்களை அனு சரிக்கின்றோம். வியாபாரம் எழுச்சி காணும் காலமுண்டு. வியாபாரம் நட் டத்தை எதிர்நோக்கும் நாட்களை சந் திக்கின்றோம். சக விசுவாசிகள் எங் களை புகந்ழ்து பேசுகின்ற நேரம் உண்டு. சில வேளைகளிலே, ஆகாத சம்பாஷனைகளினால் மனவேதனை அடைந்து கொள்ளும் நேரமும் உண்டு. சுகதேசிகயாக வாழும் நாட்கள் உண்டு. நோய்வாய்ப்பட்டு கட்டிலிலே இருக்கும் காலங்களும் உண்டு. வாயிறாற உண்ணும் நாட்கள் உண்டு. பட்டினி கிடக்க வேண்டிய நேரங்களையும் நாம் சந்திக்கின்றோம். நன் மை பெற்றவர்கள் தீமை செய்யும் நாட்கள் உண்டு. நன்மை செய்த வர்கள் நன்றியதலுள்ளவர்களாய் இருக்கும் காலமும் உண்டு. சீராய் நடக்கும் நாட்கள் உண்டு. பாவங்கள் செய்து ஒடுங்கிப் போயிருக்கும் காலங்க ளும் உண்டு. இப்படியாக காலங்களையும் பருவங்களையும் நீங்கள எதிர்நோக்கும் போது, நம்முடைய வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் என்ன? மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று வாயி னால் அறிக்கை செய்யாவிடினும் உங்கள் இருதயத்தில் தோன் றும் எண்ணங்கள் என்ன? இரண்டு வகையான அறிக்கையே விசுவாச மார் க்கத்தாரின் வாயிலிருந்து புறப்படுவதை அவதானிக்க முடியம். தேவ னுக்குரியவைகள் அல்லது இந்த உலகத்திற்குரியவைகள். விசுவாசத் துக்குரியவைகள் அல்லது அவிசுவாசத்திற்குரியவைகள். அதாவது, நாம் எல்லா கடினமான சூழ்நிலைகளிலும் எனக்கு ஒன்றும் நடக்கவி ல்லை, நான் நன் றாகவே இருக்கின்றேன் என்று அறிக்கை செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. நடந்த சம்பவங்களால், ஒருவேளை நம் இருதயத்தில் பயம், திகில், துக்கம், துயரம், வேதனை போன்ற உணர் வுகள் உண்டாயிருக்கலாம். அந்த வேளையிலே, நம்முடைய உண்மை யான நிலைமையை உள்ளபடி நம் தேவனாகிய கர்த்தரிடம் கூறி, எல்லா காலங்களிலும், பருவங்களிலும், என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு. நான் நம்புகிறது அவராலே வரும் என்று அவருடைய ஆளு கையை அறிக்கை செய்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமான தேவனே, எக்காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், அவிசுவாசத்திற்குரிய வார்த்தைகளை அறிக்கை செய்யாதிருக்க என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 56:3