புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2024)

'உங்கள் கலந்துரையாடல்கள்'

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


குடும்பமாக கூடிவரும் போது நீங்கள் பொதுவாக பேசிக் கொள்ளும் காரியங்கள் என்ன? நீங்கள் நண்பர்களாக கூடிவரும் போது எதைக் குறி த்து அதிகமாக பேசிக் கொள்கின்றீர்கள்? உற்றார் உறவினரை சந்தி க்கும் போது எதை ஆர்வாக பேசுகின்றீர்கள்? இப்படியாக சக ஊழியர் களை சந்திக்கும் போது, விசுவாசிகளை காணும் போது எதைக் குறி த்து கலந்தாலோசிக்கின்றீர்கள்? சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாரு ங்கள். அரசியலைக் குறித்து பேசுகி ன்றவர்கள் அதைக் குறித்த அறி விலே வளருகின்றார்கள். விளையா ட்டுக்களை குறித்து பேசுகின்றவர் கள், அவைகளினாலே தங்கள் மன தை நிறைத்துக் கொள்கின்றார்கள். குறைகளை குறித்தே பேசுகின்றவர் கள் குறைகளிலே பாண்டித்தியம் பெறுகின்றார்கள். இப்படியாக விசு வாசிகள் எதைக் குறித்து பேசுகின்றார்களோ, அவைகளினாலே நிரப்ப ப்படுகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, கோணலும் மாறுபாடானதுமான சந்ததியின் நடுவிலே நாம் வாழ்ந்து வருகின்றோம். சவால்களும், கலகங்களும், வன்முறைகளும், குறைகளும் எங்கும் மலிந்து கொண்டே போகின்றது. நல்ல செய்திகளை கேள்விப்படுவது அரிதாகவே இருக்கின்றது. ஆனால், தேவனுடைய வார்த்தை கூறுவது என்ன? சம்பூரணமான சூழ்நிலையிலே, வேத வார்த்தைகளை தியானி ப்பவன், காலத்திலே தப்பாமல் தன் கனியை கொடுப்பான் என்று கூறுகின்றதா? அப்படியாகயல்ல. சூழ்நிலைகள் எப்படியாக இருந்தா லும், துன்மார்கர் பெருகியிருந்தாலும், பரிகாசக்காரர் சூழ்திருந்தாலும், பாவிகள் பெலத்திருந்தாலும், எவை எப்படியாக இருந்தாலும், 'கர்த்தரு டைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேத த்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்க ளின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலை யுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.' மழைத்தாழ்சியான நாட்களிலும், வெப்பம் அதிமாக நாட்க ளிலும் அவன் பலன் கொடுகின்றவனாகவே இருப்பான். எனவே, நீங் கள் எதை கேட்கின்றீர்கள் என்றும், தேவனுடைய வார்த்தையை கேட் கின்ற விதத்தைக் குறித்தும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். தேவ னுடைய வார்த்தைகள் பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள். அவை களினாலே விசுவாசக் கண்கள் திறக்கப்படுகின்றது. எனவே நீங்கள் அதையே பேசி, தியானித்து, கலந்துரையாடுகின்றவர்களாக இருங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் எப் போதும் உம்முடைய வார்த்தையை கேட்பதிலும், தியானிப்பதிலும், கைகொள்வதிலும் வளரும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 17:7-8