புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2024)

உங்கள் நாளாந்த பேச்சுக்கள்

உபாகமம் 6:7

நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போ தும் அவைகளைக் குறித்துப் பேசி,


ஒரு அயலிலே இருந்த இரண்டு குடும்பங்கள், பொருளாதார நெருக்க டிகள் மத்தியிலே, மாதந்தம் கிடைக்கும் ஊதியத்திலே வாழ்ந்து வந்தார் கள். ஊரிலே கள்வர்களினால் உண்டாகும் தொல்லைகளும், வன்முறைகளும் ஒவ்வொரு ஆண்டிலும் பெருகிக் கொண்டே சென்றது. அப்ப டி ப்பட்ட துர்செய்திகளை அவர்கள் கேட்கும் போது, முதலாவது குடும்ப த்தின் தந்தையானவர்: அவரு டைய வார்த்தையின்படி தேசத் திற்காகவும், ஆளுகின்ற வர்க ளுக்காவும் நாங்கள் வேண்டு தல் செய்வோம். இதுவரை நம் மைக் காத்த ஆண்டவர் இயேசு, நம்மை தொடர்ந்தும் நடத்து வார் என்பதற்கொத்த வேத வார்த் தைகளை பிள்ளைகள் முன்;நி லையிலே அறிக்கை செய்து வந் தார்கள். நாட்கள் கடந்து சென்றதும் அவர்கள் பிள்ளைகளும் அவ் வண்ணமாகவே பேசுவதற்கும், கிரியைகளை நடப்பிப்பதற்கும் பழக்கிக் கொண்டார்கள். நாங்கள் திறப்பின் வாசலிலே நின்று தேசத்திற்காக ஜெபிக்கின்றவர்கள் என்ற தேசத்தைக் குறித்த பாரம் அவர்க ளில் பெருகிற்று. இரண்டாவது குடும்பத்தினரின் தந்தையாரானவர்: செய்திகளை கேளு ங்கள், நாட்டின் பொருளாதார நிலைமையைப் பாருங்கள். இந்த தேசம் உருப்படாது, இந்த ஊர் சரிவராது என்று தேசத்தைக் குறித்தும், ஆளுகைகளைக் குறித்தும் பிள்ளைகள் முன் னிலையிலே பேசி வந்தார்கள். நாளடைவிலே அவர்களுடைய பேச்சும், கிரியைகளும் தேசத்திற்கும் ஆளுகைக்கும் எதிரானதாகவும், கசப்புள்ளதாகவும் மாறிவிட் டது. பிள்ளைகள் எதை பேசக் கேட்டார்களோ, எதை பார்த்து வந்தார்களோ, அவைகளால் அவர்களுடைய சிந்தை நிரப்பப்பட்டது. பிரியமான வர்களே, இந்த உலகத்திலே வாழும் நாங்கள், கடைதெருவிற்கு சென்று சில காரியங்களை செய்து வர வேண்டும். அதன்படி சில செய்திகளையும், கருத்துக்களையும் அறிய வேண்டி தேவை உண்டு. அவை தேவைக்கேற்றபடி மட்டாக இருக்கட்டும். அவைகளினாலே ஜெயம் அல்ல பயமே வளரும். தேவனுடைய வார்த்தைகளோ, ஜீவனுள்ளவைகள். அவைகளை, வாசித்து, கேட்டு, தியானம் செய்து, கைகொள்கின்றவர்களுக்கு மிகுந்த பலன் உண்டு. இந்த உலகத்தை ஜெயித்த வார்த்தையானவராகிய இயேசுவிலே அவர்கள் நிலை கொண்டிருப்பதால், அவர்கள் விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருந்து, விசுவாசத்திற்குரிய வார்த்தைகளையே அறிக்கை செய்வதால், இந்த உலகம் அவர்களை மேற்கொள்ள முடியாது.

ஜெபம்:

ஜீவன் தரும் திருவார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, அவைகளின் மேன்மையைக் குறித்த உணர்வை நான் இழந்து போகாதபடிக்கு, இந்த உலக போகிலிருந்து என்னை விலக்கி காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5