புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2024)

வாழ்க்கையை எதிர்நோக்கும் சவால்கள்

எபேசியர் 6:16

எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.


ஒரு விசுவாசியானவன், செல்ல செழிப்புடனோ, அல்லது போதும் என் னும் மனதுடனோ, அல்லது வறுமைக் கோட்டிற்குள்ளோ, நீடித்த நாட்களாய் இந்த உலகத்திலே வாழ்ந்திருந்தும், ஆரம்பத்திலே கொண்டிருந்த விசுவாசித்தலே நிலைத்திருந்து பெருகாமல், அதைவிட்டு வழுப்போவானானால் அவன் நீடித்த நாட்களாய் வாழ்ந்ததன் பலன் என்ன? ஒருவேளை, அவனுடைய ஆயுள் நாட்கள் நீடித்திருந்ததினால், ஊரிலுள்ள மனிதர்களால் புகழப்படுவானேயல்லாமல், விசுவாமில்லா மல், தேவனுக்கு பிரியமாக இருக்கமாட்டான். (எபி 11:6) மனுஷகு மாரன் வரும் போது, பூமியிலே விசு வாசத்தை காண்பாரோ என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். (லூக்கா 18:8 நாம் நல்ல போராட்டத்தை போராடுவதற்கு விசுவாசமானது இன்றியமையாததாக இருக்கின்றது. ஒரு போர்வீரனானவன், தன் கேடகத்தை தொலைத்து விட்டு, போர்க்களத்திற்கு செல்வானாக இருந்தால், அவன் போராடும் போது எதிரிகள் அவனை எளிதில் மேற்கொண்டு விடுவார்கள் அல்லவா. எதிரிகள்; இலகுவாக அவனைக் காயப்படுத்தி, சிறைப்பிடித்துக் கொள்வார்கள் அல்லது அவன் எதிரிகளின் கையினாலே சீக்கிரமாக மாண்டு போய்விடுவான். அதுபோலவே, ஒவ்வொரு விசுவாசி க்கும் ஆவிக்குரிய போராட்டம் உண்டு. (எபே 6:12) அவன் ஆண்டவர் இயேசு வழியாக இரட்சிப்பை அடைந்த பின்பு, ஒரு நாள் மட்டுமே இந்தப் பூமியிலே வாழ்ந்தாலும், அல்லது மேலும் எண்பது வருடங்கள் வாழ ந்தாலும், இந்த உலகத்திலே வாழும்வரைக்கும் அவனுடைய வாழ்க்கையிலே ஆவிக்குரிய போராட்டத்தை தவிர்த்துக் கொள்ள முடியாது. தனக்கு போராட்டம் இல்லை என்று கூறுபவன், தன் விசுவாசமாகிய கேடகம் இல்லாமல் போர்க்களத்திற்கு சென்ற போர்வீரனுக்கு ஒத்தவனாக இந்த பூமியிலே வாழ்கின்றவனாக இருப்பான். அவன் சபையோர், உற்றார் உறவினர், நண்பர்கள், சகவேலையாட்கள் மத்தியிலே விசுவாசி என்ற பெயரை தரித்தவனாக இருந்தாலும், அவன் ஆவிக்குரிய வாழ்க்கையிலே பெலவீனப்பட்டு, ஆவிக்குரிய நோய் கொண்டவனாகவும், அடிமைத்தனங்களினால் ஆவிக்குரிய வாழ்க்கையிலே செத்துப் போனவனுமாக மாறிவிடுகின்றான். எனவே, எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவர் இயேசுவிலே நிலத்திருந்து வாழுங்கள். போர்க்களத்திலே போர் செய்யும் நல்ல போர்வீரனைப் போல விசுவாசம் என்னும் கேடகத்தை அனுதினமும் உயர்த்திப் பிடித்தவர்களாக முன்செல்வோமாக.

ஜெபம்:

இந்த உலகிலே வெற்றி வாழ்க்கை வாழ என்னை அழைத்த தேவனே, நாம் ஒருபோதும் உம்மேல் கொண்ட விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போய்விடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:4-5