தியானம் (கார்த்திகை 10, 2024)
வெற்றி சிறந்த ஓட்டம்
1 பேதுரு 5:9
விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;
அவன் நரை மயிரும் பூரண ஆயுசும் உள்ளவனாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மரித்தான். அவன் பிள்ளைகள் பலத்திருக்கின்றார்கள். அவன் சந்ததி பூமியிலே பெருகியிருக்கின்றது. அவன் பாக்கியவான் என்று சிலருடைய வாழ்க்கையைக் குறித்து ஒரு சில விசுவாசிகள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கர்த்தருக்கு பயந்து அவர் வழிக ளிலே நடக்கின்றவர்கள் இவ்விதமான வாழ்க்கையை வாழ்வதுண்டு. அதனால், நரை மயிரும் பூரண ஆயு சோடு, பெருகியிருப்பவர்கள் யாவரும் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளிலே நடப்பவர்கள் அல்லர். (சங் 73). அதுமட்டு மல்ல, இளவயதிலோ அல்லது பாதி வழி யிலோ இவ்வுலகத்தைவிட்டு கடந்து சென் றவர்கள் பாவிகளும், துன்மார்க்கர்களும் அல்லர். அநேகர் கர்த்தருக்காக வாழ்ந்து, அவருக்காக பல பாடுகள், துன்பங்களை சகித்து, பல உபத்திரவங்கள் மத்தியிலும் இறுதிவரை விசுவாசத்தை தளரவிடாமல, உறுதியாய் நிலை த்திருந்து, தங்கள் வாழ்க்கையை வௌ;வேறு வயதுகளிலே முடித்திருக் கின்றார்கள். ஆதாம் ஏவாளுடைய குமாரனாகிய ஆபேல், திருமணம் செய்ததாகவோ, பிள்ளைகள் பெற்றதாகவோ வேதத்திலே குறிப்பிட ப்படவில்லை. தேவனாகிய கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆபேல், இளவயதிலேயே அவனுடைய மூத்த சகோதரனாகிய காயீனினால் கொலை செய்யப்பட்டான். குடும்பமும் சந்ததியும் இல் லாமல் மரித்துப் போன அவனைக் குறித்து அவனுடைய காணிக் கைக ளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். அவன் விசுவாசத்திலே நிலைத்திருந்ததால், தேவனுக்கு பிரியமான பலிகளை செலுத்தினான் (எபிரெயர் 11:4). எனவே, வயதெ ல்லைகளையும், பூமியில் ஒருவன் வாழும் வாழ்க்கையின் செழிப்பை யும் மையமாக வைத்து, அவன் பாக்கியம் பெற்றவனோ அல்லது நிர்பா க்கியுமுள்ளவனோ என்று தீர்மானித்துக் கொள்வதை நிறுத்தி விடுங்கள். உங்களுக்கு முன்பாக ஓடி வெற்றி சிறந்த அநேக பரிசுத்தவான்களி டத்தில் அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகின்றதென்று மேகம் போன்ற திரளான சாட்சிகள் நமக்கு இருக்கின்றது. அவர்களில் சிலரின் சாட்சியை எபிரெயர் 11ம் அதிகாரத்திலே நாம் காணலாம். கருப்பொரு ளாவது, ஒருவன் இந்த பூவுலகில் வாழ்ந்த ஆண்டுகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவன் தன் ஓட்டத்தை முடிக்கும் போது, அவன் விசுவாசத்திலே நிலைத்திருந்தால், அவன் கர்த்தருடைய பார்வையிலே பாக்கியம் பெற்றவனாக இருப்பான்.
ஜெபம்:
பரலோக தேவனே, இந்த உலகத்தின் போக்கிலே நான் என் ஆசீர்வாதங்களை அளவிடாமல், விசுவாசத்திலே நிலைத்திருந்து உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ என்னை கரம் பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 13:5