தியானம் (கார்த்திகை 09, 2024)
'நல்ல போராட்டம்'
1 தீமோத்தேயு 6:12
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தி யஜீவனைப் பற்றிக்கொள்;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தேசப்பற்றுள்ளவ னா கவும், ராஜபக்தியுள்ளவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன் தன்னு டைய தேசமானது, எதிரிகளால் முற்றுகை போடப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை கேட்;டபோது, தன் தேசத்தை பாதுகாக்கும்படி, தன் னுடைய ராஜாவவிற்கு தான் எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று தன் மனதிலே தீர்மானம் செய்து கொண்டான். போர்வீரர்களைப்போல ஆண்டாண்டு காலமான பயிற்சியும் அனுபவமும் அவனிடம் இருந்ததி ல்லை. விசேஷ பட்டாளத்திலே இரு ப்பவர்களைப் போல உடற்பெல னும் அவனுக்கு இருந்தில்லை. ஆனா லும், யுத்த நாட்களிலே, ராஜாவா னவரின் படையிலே சேர்ந்து, சில பயிற்சிகளைப் பெற்று, யுத்த வீரர் களின் நலனை விசாரிப்பதற்கும், அவர்களுக்கு வேண்டிய முதலுதவி களை செய்வதற்கும், தண்ணீர் கொடுப்பதற்கும் தாணையங்களிற்குள் போக்கும் வரத்துமாகவும் அவன் இருந்து வந்தான். ஒரு நாள் நடந்த கடும் போரிலே அவன் படு காயமுற்றதால், மரித்துப் போனான். எதிரிக ளுடனான யுத்தம் முடிந்து போகவில்லை ஆனால், அவனோ, தன் குறு கிய வாழ்நாட்களிலே விசுவாசமுள்ள ஒரு போர்ச்சேவகனாக நல்ல போ ராட்டத்தை போராடினான். பிரியமான சகோதர சகோதரிகளே, 'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்' (2 தீமோ 4:7) என்று தேவ ஊழியராகிய பவுல் என்பவர் தன்னுடைய கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையைக் குறித்து கூறியிருக்கின்றார். சில வேளைகளிலே, சில விசுவாசிகள் இந்த வார் த்தை எங்களுக்கு பொருந்தாது. எங்களுக்கோ அப்படியான பெரிதான அழைப்பு இல்லை. எனவே அப்படியான வார்த்தையை அறிக்கை பண்ண நாங்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கி ன்றார்கள் அல்லது எண்ணிக் கொள்கின்றார்கள். அப்படியாக நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், பெலவீனங்களிலே நம்மைப் பூரணப்படு த்தும் தேவ கிருபையிலே பெலப்படுங்கள். ( 2 தீமோ 2:1) போருக்கு சென்ற அந்த வாலி பனானவன், தன் விசுவாசத்திலிருந்து தளர்ந்து போகாமல், தான் பெற்ற பணியை இறுதிவரை செய்து முடித்தான். (ரோமர் 12:3-8) அதுபோ லவே, நம்முடைய வாழ்நாட்களிலும், நமக்கு கொடுக்கப்பட்ட பெலத்தி ன்படி, நாம் பெற்றுக் கொண்ட அழைப்பை நிறைவேற்றும்படிக்கு, விசு வாசத்திலே நிலைத்திருப்போம். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடி க்கிறவருமாயிருக்கிற இயேசு இந்த உலகம் முடியும்வரைக்கும் உங்களோடு இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கின்றார். (எபி 12:1, மத் 28:20)
ஜெபம்:
காலைதோறும் புதுக் கிருபையை பொழிகின்ற தேவனே, விசுவாசாத்திலே நிலைத்திருந்து, பெற்ற பணியை நிறைவேற்றி முடிக்க, உம்முடைய கிருபையை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 12:9