புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2024)

தேவனுடைய திட்டம் நிறைவேறட்டும்

யோவான் 8:32

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.


ஒரு குறிப்பிட்ட ஊரிலுள்ள சனசமூக நிலைமொன்று, நல்ல கொள்கைகள் கோட்பாடுகளோடு, அநேக ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதும், மதுபானம் போதைவஸ்து போன்ற அடிமைத்தன கட்டுகளிலிருப்பவர்களை விடுதலை செய்வதற்கு வழிவகுப்பதும் அவர்களின் அடிப்படைத் திட்டங்களில் உள்ளடங்கியிருந்தது. நாளுக்கு நாள் அந்த சனசமூக நிலை யத்தின் திட்டங்கள் விருத்தியடை ந்து வந்தது. அந்த ஊருக்கு புதிதாக வந்த மனிதனொருவன், ஊரின் சன சமூக நிலையத்தினால் நடத்தப்படும் உதவித் திட்டங்களுக்கு தன்னி டமிருந்த மிகையான ஐசுவரியத்தினாலே ஆதரவளித்து வந்தான். நாள டைவிலே, அந்த சனசமூக நிலையமானது எந்த அடிமைத்தன கட்டுகளி லிருந்து ஊர் மக்களை விடுதலையாக்க வேண்டும் என்று இயங்கி வந் ததோ, அந்த அடிமைத்தன கட்டுகள் அந்த ஐசுவரியவானுடைய வாழ்க் கையிலிருந்து வந்தது. அது மட்டுமல்லாமல், அவைகளை செய்யும்ப டிக்கு தன் நண்பர்களையும் அவன் தன் கிரியைகள் வழியாக ஊக்கு வித்து வந்ததை அந்த சனசமூக நிலையத்தின் அதிகாரி, அறிந்த போதும், 'இந்த வருடம்தானே அவன் எங்களுடைய ஊருக்கு வந்தான், நாங்கள் கொஞ்சக் காலம் பொறுத்திருப்போம்' என்று கூறினார். ஆனால், கால ங்கள் கடந்து சென்ற போது, அவர்களில் ஒருவனும் அந்த ஐசு வரி யவானோடு அவனுடைய வாழ்க்கை முறைமையைக் குறித்து பேசத் துணியவில்லை. அது நீடிய பொறுமையல்ல, மாறாக அங்கிருந்தவர் களுக்கு அந்த ஐசுவரியவானடைய இரட்சிப்பைவிட அவன் கொடுக்கும் பணமே முக்கியமாக இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய எந்தக் கிரியைகளும், செயற்திட்டங்களும், மருகூ ட்டு தலும் எவரையும் மனந்திரும்புவதற்கோ, இரட்சிப்படைவத ற்கோ நடத்துவ தில்லை. சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுத லையா க்கும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, அன் போடு சத்தியத்தை அறிவியுங்கள். (எபே 4:15) சத்தியத்தை அறிந்த ஒரு வன், தான் அறிந்த சத்தியத்தை கூறாவிட்டால், அதை அறியாத வன் எப்படித் அறிந்து கொள்வான்? அவரைக் குறித்துக் கேள் விப்படாதவ ர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப் படிக் கேள்விப்படுவார்கள்? (ரோமர் 8:14). எனவே, விசுவாமார்க்கத்தார்;, தாங்கள் ஆரம்பித்த செயற்திட்டங்களை நிறைவேற்றுவதைவிட, தேவ னுடைய சித்தத்தை நிறைவேற்றுவதே இன்றியமையாதது. தேவ வார்த் தையை களங்கமில்லாமல் அறிவித்து, அதை பின்னர் அவர்களுக்காக ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய கிரியைகளல்ல, உம் முடைய வசனமே நித்திய ஜீவனை கொடுக்கின்றது என்பதை அறிந்து உணர்ந்து அதன்படி செயற்பட எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 107:20