தியானம் (கார்த்திகை 07, 2024)
விடுதலைக்கு வழி...
ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
கர்த்தருடைய வார்த்தையைக் கேளாமல், அறிந்தோ அறியாமலோ, ஆவிக்குரிய வாழ்வில் பின்னடைவை சந்தித்திருக்கின்றீர்களா? சிறை வாழ்க்கை வாழ்வது போல, பல அடிமைத்தனங்கள் மேற்கொண்டு விட் டதா? ஜீவ போஜனத்தை தள்ளிவிட்டதால், ஆன்மீக நோய் பற்றிக் கொண்டு விட்டதா? தாமதமின்றி, தயக்கமின்றி, மனத் தாழ்மையோடு கர்த்தரிடத்திற்கு திரும்புங்கள். ஏசாயா என்னும் தீர்க் கதரிசியின் நாட்க ளிலே, தேவனாகிய கர்த்தர் தன் ஜனங்களை நோக்கி: வானங்களே கேளுங்கள், பூமியிலே, செவிகொடு, கர்த்தர் பேசுகிறார். நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன், அவர் களோ எனக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண் டவனின் முன் னணையையும் அறியும், ஆனால் என் ஜனங்களோ அறிவில் லாமலும், உணர்வில்லாமலும் இருகின்றது என்றார். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? அதிகமாய் விலகிப் போகிறீர்களே, தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமு மாய் இருக்கின்றது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை. அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும் எண்ணெயினால் ஆற்றப்ப டாமலும் இருக்கின்றது என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பிள்ளைகள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஆரோக்கியமான சுக வாழ்வு தரும் கர்த்தருடைய வேதத்தை மறந்து போனார்கள். ஆனாலும், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். அது எப்படி ஆகும், பின்வாங்கி போனவர்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்? 'நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்' என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆரம்ப நாட்களிலே, ஆன்மீக வாழ்விலே, சுகதேகியாய் இருந்தேன், படிப்படியாக பின்னிட்டு, இன்று நோய்கொண்டவனாக இருக்கின்றேன் என்று துக்கத்திலேயே தரித்திருந்து நாட்களை விரயப்படுத்தாமல், உங்களுக்காக தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்த கிருபை நிறைந்த ஆண்டவராகிய இயேசு விடம் திரும்புங்கள். உங்களைத் தாழ்த்தி கர்த்தரிடத்திலே சேருங்கள். அவர் மன் னித்து இழந்து போனதை திரும்பித் தர தயவுள்ளவராக இருக்கின்றார்.
ஜெபம்:
என் எஜமானானகிய என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை மறந்து உணர்வற்ற வாழ்க்கைக்கு திரும்பாதபடிக்கு, உம் வார்த்தையின் வெளிச்சத்திலே வாழும்படிக்கு என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 1:9