தியானம் (கார்த்திகை 06, 2024)
ஆன்மீக நோயிலிருந்து விடுதலை
சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்? என்று தேவனாகிய கர்த்தர் தன்னுடைய ஜன ங்களின் உணர்வற்ற வாழ்க்கையைக் குறித்து கூறியிருக்கின்றார். நாள் பட்ட புண் பழைய புண் என்பது போல, ஆவிக்குரிய நோய் கொண் டவர்கள் அதை ஆரம்பத்திலே கவனியாமல் போகும் போது, அது மனைந்து பரவி விடுகின்றது. சரீரத்திலே இருக்கும் நோய்களை கவனியாமல், மருந்துகளை அசட்டை செய்து, அசதியாக இருப்பவர்களின் நிலைமையானது மோசமாக மாறிவிடுகி ன்றது. அப்படியான நிலைமைக்கு தள்ளப்படுகின்றவர்களுக்கு, உயிர் ஆபத்தை தவிர்த்துக் கொள்ளும்ப டிக்கு, காலதாமதமின்றி, சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறிவிடுகின்றார்கள். அந்த சிகிச்சையின் போதும், சிகிச்சையின் பின்பும் அதிக வேதனை உண்டாயிருக்கும். விசுவாசிகளுடைய ஆவிக்குரிய வாழ்வில் உண்டாகும் நோய்களை கவனியாமல் விட்டுவிடும் போது, அதனால் பாரிய பின்விளைவுகள், அவர்களுக்கும், அவர்களைச் சூழ உள்ளவர்களுக்கும் உண்டாகிவிடுகின்றது. மனந்திரும்புகின்ற பாவியை மன்னிப்பதற்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு தயை பெருத்தவரும், உண்மையும் நீதியுமுள்ளவராக இருக்கின்றார். மன ந்திருமபும் கள்வனை கர்த்தர் மன்னித்து ஏற்றுக் கொள்வார். ஆனால் அவன் பூமியில் வாழும் நாட்களில், அவன் சம்பாதித்துக் கொண்ட கள்வன் என்கின்ற பெயரை மனிதர்கள் மறந்து போவார்களோ? இவ்வண்ணமாக, குடித்து வெறித்து, களியாட்டங்களில் இருக்கும் பின்மாற்றக்காரன், மனந்திரும்ப அவனுக்கு சந்தர்ப்பம் உண்டு. அவனால் அவனுடைய மனைவி பிள்ளைகள், சகோதர சகோதரிகளுக்கு உண்டான நோவும் அவமானமும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைக்கு சில விசுவாசிகள் தங்களைத் தாங்களே தள்ளி விழுத்திக் கொள்கின்றார்கள். முற்காலங்களிலே, தேவனுடைய வார்த்தையைக் கேளாமல், தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டவர்கள், உணர்வடையும் வரை சிறைவாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதுபோலவே, கீழ்படியாமல் இருக்கும் சில தேவபிள்ளைகள் உணர்வடையும்வரை, தேவ னானவர்தாமே, சில காரியங்களை அவர்களுடைய வாழ்விலே அனுமதிக்கின்றார். தயங்காமல் தாமதமின்றி கர்த்தரிடத்திற்கு திரும்புங்கள். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்குவார்.
ஜெபம்:
அன்பின் பரம தந்தையே, நான் ஆவிக்குரிய நோய் கொண்டு ஒடுங்கிப் போகாதபடிக்கு, உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு, சீக்கிரமாய் உம்மிடம் திரும்பும் உணர்வுள்ள, இருதயத்தைத் தந்து என்னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவேல் 2:12