புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2024)

'அருமருந்து'

நீதிமொழிகள் 3:8

அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.


ஒரு பிள்ளை, வாலிப பருவம் மலர்ந்ததும், வீட்டிலே பெற்றோர் கொடுக்கும் போஷாக்கு நிறைந்து உணவை உட்கொள்ள விரும்பமில்லை. மந்த போஷாக்கை நிவர்த்தி செய்வதற்கு மருத்துவர் கொடுத்த விற்றமின் மற்றும் ஊட்டசத்துள்ள பிரதி ஆகாரத்தின் சுவைகள் பிடிக்கவில்லை. அதனால், அவைகளையும் ஒழுங்காக உட்கொள்ளுவதில்லை. சுத்தமான தெளிவான தண்ணீருக்கு பதிலாக பலவகையான பானங்களால் அவன் தன் தாகத்தை தீர்த்துக் கொண்டான். ஆண்டுகள் கடந்து சென்றதும், மந்த போஷாக்கினாலே உண்டான பெலவீன மானது, நோயின் அறிகுறிகளை வெளிக் காட்ட ஆரம்பித்தது. பெற்றோர், தங்கள் மகனானவனை துரிதமாக மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். மருத்துவர், வாலிபனுடைய நிலைமையை சோதித்தறிந்த பின்பு, அவனுக்கேற்பட்டிருக்கும் நோயிலிருந்து சுகமடைவற்கு, சில மருந்துகளை தவறாமல் எடுக்கும்படிக்கும், தகுந்த ஆகாரங்களை உண்டு, சுத்தமான தண்ணீரைக் குடிக்கும்ப டிக்கு அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நாம், ஜீவ உணவாகிய, ஜீவ தண்ணீராகிய தேவ வார்த்தைகளை உட்ககொள்ளாமல் போகும்போது, ஆவிக்குரிய வாழ்விலே பெலவீனத்தின் அறிகுறிகள் உண்டாகின்றது. அந்த பெலவீனங்களை தேவ ஆலோசனையின்படி மேற்கொள்ளாதவிடத்து, அந்த பெலவீனங் களானது ஆவிக்குரிய நோயாக மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட வேளைகளிலே, தேவனுடைய வார்த்தை மட்டுமே நமக்குண்;டான ஆவிக்குரிய நோயைக் குணமாக்கி ஆரோக்கியம் தரும் அரும் மருந்தாக இருக்கின்றது. மருந்துகள் சில வேளைகளிலே மிகவும் கசப்பாகவும், மாத்திரைகள் உட்கொள்வதற்கு கடினமானதாக இருப்பதைப் போல, ஆவிக்குரிய நோயிலிருந்து குணமடையும்படி செய்யும் தேவனுடைய அருமருந்தானது, நல்ல தகப்பனானவனுடைய சிட்சையைப் போல கசப்புள்ளதாக இருக்கும். ஆவிக்குரிய நோயிலிருந்து விடுதலையடைய, பின் வாங்கி போனவர்கள், தங்கள் நிலைமையை உணர வேண்டும். அவர்கள் உணர்வடையும்படி அவர்கள் மனக்கண்கள் பிரகாசிக்கப்பட வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் இருள் நீங்கும்படி, ஜீவ ஒளி பிரகாசிக்கப்பட வேண்டும். பெலவீனங்கள் நீங்கும்படிக்கு இருதயம் உணர்வடைய வேண்டும். இல்லாவிடில், முறுமுறுப்புக்கள்: தர்க்கங்களையும், மனக்கசப்புக்களையும், சண்டை, பிரிவினைகளையும், பிறப்பிக்கும்.

ஜெபம்:

உடலுக்கெல்லாம் ஆரோக்கியம் தரும் ஜீவ வார்த்தையை எனக்கு தந்த தேவனே, அந்த வார்த்தையை என் இருதயத்தில் பதித்து வைத்து, அதை காத்துக் கொள்ள எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105