புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2024)

வார்த்தையைக் குறித்த வாஞ்சை

1 பேதுரு 2:3

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.


ஒரு புதிதாய் பிறந்த குழந்தை பால் குடிப்பதற்கு எவ்வளவு ஆர்வமுள்ளதாக இருக்கின்றது? அந்த குழந்தைக்கு யாரும் அதை கற்றுக் கொடு க்கவில்லை. அது சீக்கிரமாக எந்த நிபந்தனைகளுமின்றி பாலின் மேல் வாஞ்சையாக இருக்கின்றது. தேவ வசனத்தின்மேல் நாம் எவ்வ ளவாக, எப்படியாக வாஞ்சையாக இருக்க வேண்டும் என்று காண் பித்தற்காக, அப்போஸ்தலராகிய பேதுரு, ஒரு குழந்தைக்கு பாலின்மேல் இருக்கும் வாஞ்சையைப் போல நாமும் திருவ சனத்தை வாஞ்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கின்றார். குழந்தை வளர்ந்து வரும் போது, பாலை மட்டு மல்ல, உடல் வளர்ச்சிக்கு தேவை யான ஊட்டச்சத்துள்ள மற்றய ஆகார ங்களையும் உண்டு வளரும். ஆனால், சிறு குழந்தையாய் இருக்கும் போது, எப்படியாக பாலினமேல் வாஞ்சையாக இருந்ததோ, அதே வாஞ்சை யோடு ஊட்டசத்துள்ள மற்றய ஆகாரங்களையும் உட்கொள்ள வேண் டும் என்பதையே அவர் வலியுறுதிக் கூறியிருக்கின்றார். மனிதர்கள் ஆண் டவராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஆவியினா லும், ஜலத்தினாலும் மறுபடியும் பிறந்த போது, கிறிஸ்துவுக்குள் குழ ந்தைகளைப் போல இருக்கின்றார்கள். அந்த நாட்களிலே, ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கென்று, எதை செய்வதற்கும் உற்சாகமுள்ளவர் களும், ஆயத்தமுள்ளவர்களுமாக இருப்பார்கள்;. எந்த சாட்டுப் போக்கி ற்கும் இடம் கொடாமல், ஆராதனைகளில் வாஞ்சையோடு கலந்து கொள் கின்றார்கள். அப்போது வேத வார்த்தைகளை கேட்கும் போது, இரு தயம் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால், ஆண்டுகள் கடந்து செல்லும் போது, அந்த வாஞ்சையானது தணிந்து அணைந்து போய்விடுகின்றது. பிரியமானவர்களே, நாம் மறுபடியும் புதிய சிருஷ;டியாக கிறிஸ்துவுக் குள் பிறப்பிக்கப்பட்ட போது, தேவ வசனத்தை குறித்து இருந்த வாஞ் சையானது நம்மிலே பெருக வேண்டும். அந்த வாஞ்சை நம்மில் குறை ந்து போகும் போது, நம் ஆவிக்குரிய வாழ்விலே பெலவீனங்கள் தலை தூக்க ஆரம்பிக்கின்றது. சமரசங்களும், சாட்டுப் போக்குகளும், முறுமு றுப்புகளும் அவைகளின் அறிகுறிகளாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பாலை குடிப்பதற்கு இருக்கின்ற வாஞ்சையைப் போல, தேவனை அறி கின்ற அறிவிலே பெருகும்படிக்கு, தேவ வார்த்தைகயை கற்றுக் கொண்டு, கைகொ ள்ளும் வாஞ்சையானது நம்மிலே தினமும் பெருக வேண்டும்.

ஜெபம்:

செய்கையையும் விருப்பத்தையும் உண்டு பண்ணுகின்ற தேவனே, உம்மை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகும்படிக்கு திருவசனத்திலே வாஞ்சையாய் இருக்க ஆர்வமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:167