தியானம் (கார்த்திகை 02, 2024)
ஆரோக்கியம் தரும் உணவு
எரேமியா 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்;
ஒரு சிறு பிள்ளையானது, ஆரோக்கியமுள்ளதாக வளர்ந்து வருவதற்கு, பிள்ளைக்கு அவசியமான போஷhக்கு நிறைந்த உணவு வகைகளையும், அந்தக் பருக வேண்டிய பானத்தையும், அவன் சுறுசுறு ப்பாக இருப்பதற்கு அவன் நாளா ந்தம் எடுக்க வேண்டிய பயிற்சியை குறித்து அந்தப் பிள்ளையினுடைய பெற்றோர் நன்று அறிந்திருந் தார் கள். பெற்றோரும், மருத்துவ ஆலோ சனையின்படி, தங்கள் பிள்ளையின் உடல் வளர்சிக்கும் ஆரோக்கிய மான வாழ்விற்கு வேண்டிய, சத்துள்ள உணவு வகைகளையும், பானங்களையும், குறித்த நேரத்தில் தங்கள் பிள்ளைக்கு கொடுத்து, நன்றாக கவனித்து வந்தார்கள். அவை யாவும் சிறு பிள்ளையானது விரும்பும் பிரகாரமாக சுவையானதாக இல்லாதிருந்த போதிலும், பிள்ளையின் நலனுக்காக அவற்றை தவறாமல் கொடுத்து வந்தார்கள். நாம் ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்படிக்கு, ஆவிக்குரிய மனுஷனாவனுக்கு, தேவனுடைய ஜீவனுள்ள வசனமானது இன்றியமையாததாக இருக்கின்றது என்பதைக் குறித்து நேற்றைய நாளிலே தியானித்தோம். ஆரோக்கியமான அந்த ஜீவ வசனமானது, எப்போதும் நம்முடைய மாம்ச விருப்பத்தின்படி இருகப்போதில்லை. ஆவிக்குரிய உணவின் அவசியத்தை அறிந்த விசுவாசியானவனொரு வன், கிடைக்கும் ஜீவ உணவை உட்கொள்ளாமல் இருப்பானாக இருந் தால், அவனைக் குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஒரு மனிதனானவன், தன் வீட்டிலே அருமையான ஆரோக்கிய மான உணவு பதா ர்த்தங்களை சமைக்கலாம். அதை அழகாக தட்டிலே வைத்து, மேஜையின் மேல் நேர்த்தியாக வைத்திருக்கலாம். ஆனால், அவன் அதை உண்ணாமல் ஒரு காட்சிப் பொருளைப் போல அதை வைத்தருப்பானாகில், அதனால் உண்டாகும் பலனை அவன் அடை யாமல், காலப்போ க்கில் உடல் ஆரோக்கியத்தை இழந்து போவான். அது போலவே ஒருவன் திருவசனத்தைக் கேட்கலாம், அதை அழகாக எழுதி சுவரிலே மாட்டிக் கொள்ளலாம். அதை மனப்பாடம் செய்து, அதைக் குறித்து பேசலாம். ஆனால் அவன் கேட்டு, மனம்பாடம் செய்து, சுவரில் மாட்டிய திருவசனத்தை தன் வாழ்வில் உட்கொள்ளாமல் போவானாகில் அதனால் உள்ளான மனுஷனானது நாளடைவிலே பெலவீனமடைந்து போய் விடும்;. எனவே ஆவிக்குரிய வாழ்விலே ஆரோக்கியம் குன்றி, பெலவீனப்பட்டுப் போகாதபடிக்கு, ஜீவ உணவாகிய, ஜீவ தண்ணீரா கிய, ஜீவனுள்ள தேவ வார்த்தையை உட்கொள்வோமாக.
ஜெபம்:
நல் வாழ்வு அடையும்படி ஜீவ வார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, நான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும்படிக்கு உம்முடைய திருவார்த்தைககளை கைகொள்கின்றவனாக வாழும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 6:63