தியானம் (கார்த்திகை 01, 2024)
ஆன்மீக சுக வாழ்வு
யோவான் 6:55
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
ஒரு மருத்துவரானவர், ஒரு மனிதனாவனனை நோக்கி: அதின் அதின் காலத்திலே அந்தந்த பருவத்திற்கேற்ப, போஷாக்குள்ள உணவை உண்டு, போதியளவு தண்ணீரை குடித்து சுகதேகியாக வாழ்வது உனக்கு விருப்பமா? அல்லது, கண்டதையும் உண்டுவிட்டு, படிப்படியாக விற்றமின் மாத்திரைகள், நோய்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகள் என்று உன் வாழ்விலே கசப்புக்களையும், நோவுகளையும், வேதனைகளும் உண்டாக்கிக் கொள்ள விரும்புகின்றாயா என்று கேட்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்களுடைய ஆன்மீக வாழ்விலே, கர்த்தருடைய வேதம் உங்களுக்கு எப்படியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் வாஞ்சிக்கின்றீர்கள். ஆவிக்குரிய ஜீவ உணவாகவோ அல்லது பெலவீனத்திறகு கொடுக்கப்படும் விற்றமின்கள் ஊட்டசத்துள்ள பிரதி உணவாகவோ அல்லது பெல வீனங்களை கவனியாமல் இருக்கும் போது உண்டாகும் நோயை கட்டுப்படுத்த கசப்புள்ள மருந்தாகவோ அல்லது நாட்பட்ட நோயிலிருந்து உயிரைக் காக்க செய்யும் சத்திர சிகிச்கையாகவோ இருப்பதை விரும்புகின்றீர்கள். நானே வானத்திலிருந்து வந்த ஜீவ உணவு, நானே ஜீவ தண்ணீர் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அந்த வார்த் தைகயை உட்கொண்டு, அந்த பானத்திலே பானம் பண்ணுகின்றவனுக்கு ஆவிக்குரிய பெலவீனமோ, ஆவிக்குரிய நோயோ, உண்டாகுவதில்லை. ஆனால், ஜீவ வார்த்தைகளை கைகொள்ளாமல், ஜீவ தண்ணீரை பருகாமல் இருக்கின்றவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையானது, பெலவீனமடைந்து, நாட்கள் செல்லச் நோயுற்று, காலங்கள் கட ந்து செல்ல நாட்பட்ட நோயாக மாறிவிடுகின்றது. அவையாவற்றிற்கும் கர்த்தருடைய வேதமே ஊட்டச்சத்தும், மருந்தும் சத்திர சிகிச்சையுமாக இருக்கின்றது. சில வேளைகளிலே அறிந்தோ அறியாமலோ நாம் பெல வீனத்திற்குள்ளாகின் றோம். அது எங்கள் வாழ்வின் தொடர்சியாக திரும்பத் திரும்ப நடக்கும் காரியமாக மாறிவிடத் தேவையில்லை. திராட்சை செடியாகிய இயேசுவிலே ஒட்டப்பட்டிருக்கும் கொடியானது, நல்ல கனிகளை கொடுப்பதற்கு வேண்டிய யாவற்றையும் அந்த செடியிலிருந்து பெற்றுக் கொள்கின்றது. எனவே, பெலவீனமடைந்து, ஆன்மீக நோய்க்கு நம்மை நாமே ஒப்புக்கொடாமல், ஜீவ உணவும், ஜீவ தண்ணீருமாகிய தேவ வார்த்தையை அனுதினமும் தியானித்து, அந்த வார்த் தைகளை கைகொள்கின்றவர்களாக வாழ்வோமாக.
ஜெபம்:
நித்திய ஜீவனைக் கொடுக்கும் வார்த்தையை எனக்கு தந்த தேவனே, நான் உம்முடைய வாழ்வு தரும் வார்த்தைகளை இருயத்தில் பதித்துவைத்து, அதன் வழியிலே என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எரேமியா 15:16