புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2024)

மனந்திரும்புதலுக்கேற்ற கனிகள் உண்டா?

ரோமர் 12:2

நீங்கள் இந்தப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


ஆண்டவராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றக் கொண்டு, சென்ற வாழ்நாட் காலத்திலே, செய்து வந்ததுபோல, உலக களியாட்ட ங்களோடு நடைபெறும் பாட்டுக் கச்சேரிகளுக்கு, பணம் கொடுத்து அனுமதி சீட்டை வாங்கி சென்றிருக்கின்றீர்களா? அப்படியாக தசாதங்களாக செய்யவில்லை என்று நம்புகின்றேன். ஆயினும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலே, வேலை செய்யும் இடங்களிலே, அல்லது, பெருநாட்களிலே கடைத்தெருக்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்போ தும், திருமண விழாக்களிலே கலந்து கொள்ளும் போதும், அத்தகைய பாட் டுக் கச்சேரிகளை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது செய்திகள் வாயிலாக அறிந்திருக்கலாம். அத்தகைய சில விசேஷ பாட்டுக் கச்சேரிகளுக்கு, பத்தாயிரம் டொலர்களுக்கு அதி கமாக பணம் கொடுத்து ஒரு அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்கின்றார்கள். அங்கே, வாத்தியங்களை வாசிக்கின்றவர்கள், எந்த ஆலயத் திலும் வாசிப்பர்களைவிட மிக நேர்த்தியாக வாசிக்கின்றார்கள். இனிமையான குரலிலே பாடுகின்றார்கள், மேடையானது மின்குமிழ்களினால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருகின்றது. நடனமாடி பாடும் போது மேடையிலே புகையடைகின்றார்கள். ஜனங்கள் ஆரவாரத்தோடு திரண்டு வந் திருப்பார்கள். பாடல்களின் வரிகள் மனதில் உணர்ச்சிகளை தூண்டி விடுவதால், ஜனங்கள் புத்துணர்ச்சியடைந்து, ஆர்ப்பரித்து, கரகோச மிட்டு, சிரித்து, ஆனந்த கண்ணீரோடு, மயக்கம் போட்டு விழுகின்றார்கள். அவை ஒன்றும் பரிசுத்த ஆவியினாலே உண்டானவைகள் அல்ல. ஒருவேளை கர்த்தரை அறிய முன்னரும் இத்தகைய களியாட்ட விழாக் களிலே நீங்கள் கலந்து கொள்ளாதிருந்திருக்காலம். அதனால், சிலர், அந்த உணர்வுகளை சபையிலே கொண்டுவரும்படிக்கு, அவ்வண்ண மாக மேடைகளை அலங்கரித்து, உலகத்திலே நடக்கும் காரியங்களை நடப்பித்து, விசுவாச மார்க்கத்தாரின் மனங்களிலே உணர்வுகளை தூண்டிவிடுகின்றார்கள். சிலர் அதை பரிசுத்த ஆவியின் கிரியை என்று கூறிக் கொள்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் போது, நம்மை சகல சத் தியத்திலும் நடத்துவார். அங்கே பரிசுத்தத்திற்கும், நீதிக்கும், சத்தியத்திற்கும் ஏற்ற மனமாற்றம் உண்டாகும். அவ்விடத்திலே துணிகரம் அல்ல தேவபயம் ஏற்படும். முரட்டாட்டங்களும் கலகங்களுமல்ல. கீழ்படிதலும், மனத்தாழ்மையும் உண்டாயிருங்கும். எனவே, உலகத்திலே நடக்கும் காரியங்களை, துணிகரமாக சபைக்குள் கொண்டுவருகின்றவ ர்களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, என்னை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்த கிருபை செய்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:1-5

Category Tags: