தியானம் (ஐப்பசி 30, 2024)
நாளுக்கு நாள் மறுரூபமடையுங்கள்
2 கொரிந்தியர் 4:16
உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ஒருவன் குறிப்பிட்ட அந்த புனிதஸ்தலத்திற்கு தன் வாழ்நாட்களிலே ஒருமுறை சென்று வந்தால் அவனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பிக்கை வைத்திருக்கின்ற மனிதர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது, அவர்கள் அங்கு சென்ற வந்தபின்பு, அவர்கள் வாழ்க்கை எப்படியும் இருக்கலாம், ஆனால், அவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று கூறிக் கொள்கின்றார்கள். அதுபோலவே, கிறிஸ்தவர்கள் என்று தங்களை காண்பித்தக் கொள் கின்வர்கள், ஒரு முறை ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டு, ஞானஸ்நானம் எடுத்தால் போதும், அதன் பின்பு எப்படியாக பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும், அதைக் குறித்து பரலோகத்திலிருக்க தேவ னானவர் கண்டு கொள்ளமாட்டார் என்று உபதேசிக்கின்றார்கள். அதா வது, ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டு, ஞானஸ்நானம் எடுத்த பின்னர், துணிகரமாக குடித்து வெறித்து, இந்த உலகத்தின் போக் கின்படி களியாட்டங்களில் ஈடுபட்டு, விபசாரம், களவு, பொய் போன்ற அசுத்தமாக எல்லா பாவங்களை மனந்திரும்பி விட்டுவிடாமல், செய்து கொண்டிருந்தாலும் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளலாம் என்று போதித்து வருகின்றார்கள். இவர்களின் தொகையானது கடந்து தசாப்தங்களிலே வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றது. இது எவ்வ ளவு விசாலமான வழியும், இலகுவாக உபதேசமும் என்று பாருங்கள். இப்படிப்பட்ட உபதேசத்தை ஏற்றுக் கொண்டு சுகபோகமாக வாழ்கி ன்றவர்களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். அத்தகைய சபைகளை விட்டுவிலகுங்கள். அத்தகைய உபதேசங்களை செய்கின்ற வர்களை தொலைக்காட்சியிலோ, இன்ரநெற் ஊடகங்கள் வழியாகவே அவர்களை பின்பற்றாதிருங்கள். இவர்கள் சாதுரிய ஞானத்தோடு பேச வல்லவர்கள். இவர்கள் கர்த்தர் நாமத்தை கூறிக் கொண்டு, பெரிதான கட்டிடங்களை கட்டி, வாசல் விசாலமாய் இருப்பதால் திரளான ஜனங் களை தங்கள் வசமாக்கி, அதிக உலக வளங்களையுடையவர்களாக வும், செயற்திட்டங்களை செய்கின்றவர்களாவும் காணப்படலாம். கடைசி நாளிலே, கர்த்தராகிய இயேசு, வெள்ளாடுகளையும் செம்மறி யாடுக ளையும் இரண்டாக பிரிப்பார். இரண்டு பிரிவினரும் கர்த்தர் இயேசு வின் நாமத்தை அறிந்தவர்கள். ஆனால், வெள்ளாடுகளை பார்த்து உங்களை அறியேன், அக்கிரம செய்கைக்காரரே அகன்று போங்கள் என்று கூறு வார். எனவே, வஞ்சகமான போதனைகளுக்கு இடங் கொடுக்காமல், உங்கள் உள்ளான மனிதனாது நாளுக்குநாள் புதிதாக்கப்படடும்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளைப்போல, எப்போதும் ஆயத்தமுள்ளவனாக, கறைதிறையற்ற மணவாட்டியாக காணப்படும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13