தியானம் (ஐப்பசி 29, 2024)
பொருளாசையாகிய விக்கிரக ஆராதனை
கொலோசெயர் 3:5
...விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
எப்படியாக ஒரு விசுவாசி, வஞ்சிக்கப்பட்டு, சாத்தனை சேவிக்கின்றவ னாக மாற முடியும்? ஆண்டவராகிய இயேசு, இந்தப் பூமயிலே, தம் முடைய திருப்பணியை ஆரம்பித்த நாட்களிலே, பிசாசானவன் அவரை சோதித்தான். சோதிக்கும் போது, உலகத்தின் ராஜ்யங்கள் எல்லாவற் றையும் அவருக்கு காண்பித்து, நீர் சாஷ;டாங்கமாய் விழுந்து, என்னை பணிந்து கொண்டால், இவைகளெ ல்லாம் உமக்குத் தருவேன் என் றான். அப்பொழுது இயேசு, அவனை கடிந்து கொண்டு, அப்பாலே போ சாத்தானே என்று துரத்திவிட்டார். அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சோதித்தவன், இன் னும் தனக்கு சொற்ப காலம் தான் இருக்கின்றது என்று அநேகரை வஞ்சிக்கும்படி சுற்றித்திரிகின்றான். அவனுடைய வஞ்சகங்கள் புதிதா னவைகள் அல்ல. எனவே அவன், நம்முடைய ஆண்டவராகிய இயே சுவை சோதித்தது போல, விசுவாச மார்க்கத்தாரையும் உலக பொரு ட்களின் வழியாக சோதிக்கின்றான். அது தேவனுடைய ஆசீர்வாதம் என்று வேத வார்த்தைகளை புரட்டி, அவர்களில் சிலரை வஞ்சித்து, பொருளாசைக்குள் உட்படுத்திக் கொள்கின்றான். பொருளாசையானது அவர்களின் விக்கிரகமாக, தெய் வமாக மாறிவிடுகின்றது. ஆனால், அவர்களோ, உணர்வற்றவர்களாக கர்த்தர் என்னை ஆசீர்வதித்திக்கி ன்றார் என்று கூறிக்கொண்டு இந்த உலகத்திற்குரியவைகளையே நாடித் தேடுகின்றார்கள். தேவனால் பிறப்பதெல்லாம் இந்த உலகத்தை ஜெயி க்கும். பணமும் பொருளும் உலகத்திற்குற்கும் அதன் ஆளுகைக்கு ள்ளும் உட்பட்டிருப்படிப்பதால், அது உலகத்தை ஜெயிப்பதில்லை. உல கமும் அதன் போக்கும் பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது. ஆண்ட வராகிய இயேசு பிலாத்துவிற்கு முன்னாதாக நிற்கும் போது, என்னு டைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல என்று கூறினார். எனவே, இந்த ராஜ்யத்திற்குரியவைகளையே மேன்மைப்படுத்தி போதிக்கின்றவர் களையும், அவைகளுக்கு பின்பாக செல்லும் விசுவாச மார்கத்தார் என்று பெயர் பெற்றிருக்கின்றவர்களையும் குறித்து எச்சரிக்கையு ள்ள வர்களாயிருங்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இ ச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமி யில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவ கோபாக்கினை வரும்.
ஜெபம்:
பரலோக தேவனே, பொருளாசையை தங்கள் தெய்வமாக்கிக் கொண்டவர்களின், தவறான உபதேசங்களை நான் பற்றிக் கொண்டு, உணர்வற்றுக் போகாதபடிக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்து வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 5:4