தியானம் (ஐப்பசி 28, 2024)
சத்தியதினின்று விலகாதபடி பாருங்கள்
2 கொரிந்தியர் 11:3
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்து வைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக் கிறேன்.
மெய்யான பரிசுத்த திரித்துவத்திலே, பிதாவாகிய தேவன், குமாரா னாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவராக மூன்று நபர்கள், ஒன்றாய் இருக்கின்றார்கள். அதற்கு எதிர்ப் பக்கமாக, பொய்;க்கு பிதா வாகிய சாத்தானாகிய வலுசர்ப்பம், மிருகம் என்று பெயர் பெற்றிரு க்கும் அந்திக் கிறிஸ்து, கள்ளத் தீர்க்கதரிசியாகிய மூவர் இருக்கின் றார்கள். இதை வெளிப்படுத்தல் விசேஷத்திலே 13ம் அதிகாரத்தில் காணலாம். ஆதியிலே தேவன், வார் த்தையினாலே வானத்தையும் பூமி யையும் அதிலுள்ள யாவையும் சிரு ஷ;டித்தார். ஆதாம் ஏவாளை தம் முடைய சயாலாகவும் ரூபமாகவும் உருவாக்கி, தேவ மகிமையை அவ ர்களுக்கு கொடுத்தார். ஆனால் பிசா சானவனோ, வஞ்சக வார்த்தை யிலே ஏவாளை வஞ்சித்து, ஆதாம் ஏவா ளை தன்னோடுகூட நித்திய ஆக்கி னைக்குள்ளாக்கினான். பிதாவாகிய தேவன்தாமே, மனித குலத்தை நித்திய ஆக்கினையிலிருந்து மீட்டு, நித்திய ஜீவனை கொடுக்க, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். வார்த்தையானவர் மனு வுருவாக்கி இழந்து போனதை மீட்டுக் கொள்ள இந்தப் பூமிக்கு வந் தார். நித்திய ஜீவனுக்குரிய வழியை ஏற்படுத்தினார். அந்த நித்திய வழி யை அறியாதவர்களின் மனக் கண்களை குருடாக்கும்படிக்கும், ஆண்ட வராகிய இயேசுவை பின்பற்றி, அவர் காட்டிய நித்திய வழியிலே நடப் பவர்களை அதிலிருந்து வஞ்சிக்கும்படிக்கும் அந்திக் கிறிஸ்துவின் ஆவி யானது இந்த உலகத்திலே செயல்பட்டு வருகின்றது. அந்த ஆவிக்கு வஞ்சிக்கும் ஆவி என்றும் மறுநாமம் உண்டு. அதாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபைக்கு தலையாக இருக்கின்றார். ஆனால் அந்திக் கிறிஸ்துவோ சபையை எதிர்கின்றவனாக வராமல், சபையை ஆதரிப் பவன் போல தன்னை காண்பித்து, விசுவாசிகள் தேவனாகிய கர்த்ரை சேவிக்காமல், சாத்தானை சேவிக்கும்படிக்கு வஞ்சிக்கின்றவனாக வருகி ன்றான். ஆண்டவரோ, ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் பட் சிக்கின்ற ஓநாய்களை போல கள்ளத் தீர்க்கதரிசிகள் உங்கள் மத்தியிலே வருவார்கள் என்று எச்சரிப்பை வழங்கியிருக்கின்றார். அந்த வஞ்சிக்கும் ஆவியானது, சாத்தானை சேவிக்கும்படி, சாத்தானின் கீழிருக்கும் உலக பொருட்களை நாடித் தேடுவது தேவ ஆசீர்வாதம் என்றும், அவன் வேத வார்த்தைகளை புரட்டுவான். எனவே மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
ஜெபம்:
மேலானவைகளை நாடுங்கள் என்ற தேவனே, என் மனது கிறி ஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படிக்கு, வஞ்ச ஆவிகளுக்கு நான் இடங்கொடுத்து வழுவிப்போகாதபடிக்கு என்னை காத்து வழிநடத் திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 10:10